ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான இபிஎஸ்.. கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆகிற்கும்..!!
செங்கத்தில் இபிஎஸ் பயணித்த பேருந்து கடந்து சென்ற மறு நிமிடமே பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற கருப்பொருளில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாகவும், மக்களின் பிரச்சனைகளை அரசுக்கு எதிராக எழுப்பவும் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தின் முதல் கட்டமாக, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21 வரை பல்வேறு மாவட்டங்களில் இபிஎஸ் பயணிக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் அதிமுக தலைமைக் கழகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட தொகுதிகளில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இபிஎஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது அதிமுக ஆட்சிதான்! இபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்..!
இப்பயணத்தில், திமுக அரசின் குறைபாடுகளை எடுத்துரைத்து, அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இபிஎஸ்ஸின் முக்கிய நோக்கமாக உள்ளது. மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைவாழ் மக்களுடன் இபிஎஸ் சந்திப்பு நடத்தியபோது, விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்தார். மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்தப் பயணம், திமுக அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
தேன்கனிக்கோட்டையில் மக்கள் கூரை மீது ஏறி இபிஎஸ்ஸின் பரப்புரையைக் கேட்ட காட்சி, அவருக்கு மக்களிடையே உள்ள ஆதரவை உணர்த்தியது. இந்தச் சுற்றுப்பயணம், அதிமுகவின் தேர்தல் உத்தியை வலுப்படுத்துவதோடு, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அக்கட்சியை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது. இதன் மூலம், தமிழக அரசியல் களத்தில் இபிஎஸ்ஸின் செல்வாக்கு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருவண்ணாமலை செங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சாலையின் குறுக்கே வளைவு பேனர்கள் அமைக்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம், சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு ஒன்றை கடந்து சென்ற சில நொடிகளில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் எடப்பாடி பழனிசாமியின் பேருந்துக்கு பின்னால் வந்த வாகனங்கள் மீது பேனர் விழுந்தது. மேலும் நூலிழையில் எடப்பாடி பழனிசாமி தப்பினார்.
https://x.com/i/status/1956693874186829924
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தை உடனே நிறுத்தி பேனர் விழுந்த இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பேனரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற பேனர் விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அரசு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீரணும்... சுதந்திர தினத்தில் இபிஎஸ் சூளுரை!