நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க... இபிஎஸுக்கு டெல்லி கொடுத்த புது அசைன்மெண்ட்...!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீடு தேடி போய் சந்தித்த பாஜக முக்கிய புள்ளிகள் அவர் கையில் ஒரு புது அசைன்மெண்ட்டை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீடு தேடி போய் சந்தித்த பாஜக முக்கிய புள்ளிகள் அவர் கையில் ஒரு புது அசைன்மெண்ட்டை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 12 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி சுற்றுப்பயணம் மேற்கொள்வோம் என காவல்துறையிடம் வாக்கு கொடுத்து அனுமதி பெற்றாகிவிட்டது. இதுபற்றி ஆலோசிக்கவும், வர உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் குறித்த திட்டங்களை வகுக்கவும் டெல்லியில் இருந்து இரண்டு முக்கிய மேலிட பொறுப்பாளர்கள் வந்திருந்தார்கள். ஜே.பி. நட்டாவால் நியமிக்கப்பட்ட வைஜந்த் பாண்டா மற்றும் முரளிதர் இருவருமே பாஜக மையக்குழு கூட்டத்தை முடித்த கையோடு நயினார் நாகேந்திரனை அழைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் சென்றனர்.
அங்கு எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து சில ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். அதற்கு வர உள்ள நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். அப்படி அவர் பங்கேற்றார் பாஜக, அதிமுக தொண்டர்களிடையே பிணைப்பும், வரவேற்பும் அதிகரிக்கும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கரூர் செல்லும் விஜய்... பாதுகாப்பு கொடுங்க... மனு கொடுத்த தவெக...!
இரண்டாவதாக இந்த கூட்டணியை வலுபடுத்த புதியவர்களையும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்றும் இபிஎஸ் இடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக கரூர் விவகாரத்தில் சிக்கித் தவித்து வரும் விஜய்யை எப்படியாவது நம்ப பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாக எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஏனெனில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அனைவரும் விஜய் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்க, எடப்பாடி பழனிசாமி மட்டுமே விஜய்க்கு ஆதரவாகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தார். இதனால் எமோஷனல் ஆன தவெகவினர் கூட சோசியல் மீடியாவில் எடப்பாடியாருக்கு நன்றி சொல்லி பதிவிட்டு வந்தனர்.
இதனால் தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வைக்க வேண்டும் என்ற முக்கியமான அசைன்மெண்ட்டை எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி தலைமை கொடுத்துள்ளது. அத்துடன் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளையும் சிந்தாமல் சிதறாமல் கூட்டணிக்குள் கொண்டு வர சொல்லியிருக்கிறார்களாம். அதிமுக பாஜக இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கூடுதல் பலம் கிடைக்கும் அது ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகை செய்யும் அப்படின்னு சில பல அஜெண்டாக்களும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?