அதிமுகவை உள்ளிழுத்து பாஜகவுக்கு செக் வைத்த ரங்கசாமி!! என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
முதல்வரிடம் மோதல் போக்கை கையாள வேண்டாம் என மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி: சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, அமைச்சர் பதவி பங்கீடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதல்வர் என். ரங்கசாமியுடன் மோதல் போக்கை கையாள வேண்டாம் என பா.ஜ. மாநில நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பா.ஜ. 4 இடங்களிலும், அதிமுக மற்றும் ல.ஜ.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. கடந்த முறை போல் 2 அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவி உள்ளிட்ட 3 பதவிகளை பா.ஜ. கோரி வருகிறது. ல.ஜ.க. சார்பில் சார்லஸ் மார்ட்டினும் ஒரு அமைச்சர் பதவியைக் கோரி நெருக்கடி கொடுத்து வருகிறார்.
முதல்வர் ரங்கசாமி முன்பே, “அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கே அதிகப் பதவிகள்” என்று தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் பா.ஜ.வோ 10 தொகுதிகளில் போட்டியிட்டும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பதவி பங்கீட்டில் பெரும் இழுபறி ஏற்பட்டது.
இதையும் படிங்க: விஜய் சீக்கிரமே ஆட்சி அமைப்பார்! தவெக ஆட்சி அமையும்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி உறுதி!
இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி பதவியேற்பின்போது தன்னுடன் 2 அமைச்சர்களின் பட்டியலை கவர்னரிடம் சமர்ப்பித்தார். அதில் நமச்சிவாயம் மற்றும் அன்பழகன் பெயர்களை இணைத்திருந்தார். இதைப் பார்த்த பா.ஜ. தலைமை அதிர்ச்சியடைந்தது. “அன்பழகன் யார் கோட்டாவில்?” என கேட்டதற்கு முதல்வர் “உங்கள் கோட்டாவில்தான்” என கூலாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் அன்பழகன் பெயரை மாற்றி மல்லாடி கிருஷ்ணராவ் பெயரைச் சேர்த்த பிறகே பா.ஜ. நிம்மதி அடைந்தது.
இந்த சம்பவம் பா.ஜ. தலைமையை தலைசுற்ற வைத்துள்ளது. இதனையடுத்து, முதல்வர் ரங்கசாமியுடன் மோதல் போக்கை கையாள வேண்டாம் என்று டெல்லி மேலிடம் மாநில பா.ஜ. நிர்வாகிகளுக்கு தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டணி கட்சிகளிடையே பதவி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ரங்கசாமியின் உறுதியான நிலைப்பாடு கூட்டணிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாணியை பின்பற்றும் விஜய்!! திருச்செந்தூர் வழிபாடு முதல் பதவியேற்பு வரை!!