×
 

டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ! 2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!

டெல்லி போராட்டக்காரர்கள் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்; 2,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை டெல்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம், வன்முறை சம்பவங்களால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த விசாரணையில், ஜூலை 21 முதல் 23 வரை நடந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2,500-க்கும் மேற்பட்ட நபர்களை டெல்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், சில இடங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

விசாரணையின் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பல வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் மீது கத்தி, வாள், கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகளும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், சமூக வலைதளங்களில் பரவும் அனைத்து வீடியோக்களும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் மீதான தாக்குதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டறிய சிசிடிவி காட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share