“சங்கிகளின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” - எடப்பாடி, அமித் ஷா பற்றி ஏடாகூடமாக வார்த்தையை விட்ட உதயநிதி ஸ்டாலின்...!
ஒன்றிய பாஜக அரசு புதிய கல்வி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் கல்வி உரிமை பறிக்க முயற்சிக்கின்றனர்
விழுப்புரத்தில் 9,230 பயனாளிகளுக்கு ரூ. 119 கோடியே 70 மதிப்பு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 9,230 பயனாளிகளுக்கு, நூற்று பத்தொன்பது கோடியே எழுபது லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு புதிய கல்வி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் கல்வி உரிமை பறிக்க முயற்சிக்கின்றனர் இதில் தமிழ்நாட்டில் எடுபடாது. எஸ்.ஐ.ஆர் மூலம் நம்முடைய வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர். அமித்ஷா விடம் முதுகெலும்பு இல்லாத அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.
பாஜகவின் கிளை அலுவலகமாக தான் அதிமுக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. அதிமுக என்பதை அமித்ஷா திமுக என்று மாற்றிக் கொள்ளலாம். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில், அண்ணாவும் இல்ல, முன்னேற்றமும் இல்ல இந்த நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாக மாறிவிட்டார் அதிமுகவை அமித்ஷா குத்தகை எடுத்து அவருடைய கண்ட்ரோலில் வைத்துள்ளார்
இதையும் படிங்க: ”அமித் ஷாவை கேட்காமல் இபிஎஸ் இதைக்கூட செய்ய மாட்டார்” - அதிமுகவை வச்சி செய்த உதயநிதி ஸ்டாலின்...!
தமிழ்நாட்டில் எப்படியாவது மத கலவரம் செய்து சங்கிகள் தமிழ்நாட்டில் உள்ள நுழைய பார்க்கின்றனர். ஆனால் சங்கிகளின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்று பேசினார். தமிழ்நாட்டில் இந்த 4 1/2 ஐ ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பயன்பட்டு இருப்பார்கள் நாம் செய்த திட்டங்களை சாதனை செயலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தினமும் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து அவர்களை குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டார். இன்னொரு முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை பாஜக விடும் கொடுத்து விடுவார்கள். தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பாகவும், அதிக அளவு வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் அடிக்கடி சொல்வதைப் போல இளைஞர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்கப்படும். வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: போடு ரகிட.. ரகிட..!! - தமிழ்நாட்டை தட்டி தூக்குறோம்... அண்ணாமலைக்கு அமித் ஷா கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!