×
 

"புதுசா கட்சி ஆரம்பிச்ச உனக்கே இவ்வளவு அதப்புன்னா... எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ..." - மீண்டும் விஜய்யை சீண்டிய உதயநிதி...!

புதிது புதிதாக ஆரம்பிக்கும் கட்சி யின் தலைவர்களுக்கே வரலாறு கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.

புதிது புதிதாக ஆரம்பிக்கும் கட்சி யின் தலைவர்களுக்கே வரலாறு கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.

காரைக்குடியில் நடைபெற்ற திராவிட இயக்க போர்வாள் இராம.சுப்பையா 118வது பிறந்த நாள் விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது இராம சுப்பையாவின் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து

 பொது வாழ்வில் எனக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த மேடையை கருதுகிறேன்.இராம.சுப்பையா அவர்களுக்கு பிடித்த கருப்பு சட்டை அணிந்து பேசுவது மகிழ்ச்சி எனக் கூறினார்.

இதையும் படிங்க: மைத்ரேயனுக்கு அடிச்சுது ஜாக்பாட்..!! கட்சி தாவிய 3 மாசத்துல இப்படி ஒரு பதவியா..!!

திமுக தலைவர் எனக்கு இன்று வேறு ஒரு வேலை கொடுத்தார்கள். அதனை தவிர்த்து இந்த நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினராக வந்துள்ளேன். பெரியாருடைய அண்ணாவுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர் , கலைஞர் அவர்கள் உடன் பிறந்த அண்ணனைப்போல் பழகியவர் ராமசுப்பையா.

அவரது இல்லத்திற்கு சமதர்ம இல்லம் என்று சிங்காரவேலர் பெயர் சூட்டினார் என்பது கொடுப்பினை . சுப்பையாவின் மனைவி கைம்பெண் மறுமணங்களை 1935லேயே செய்து வைத்து இயக்கப் பணியாற்றியவர். திமுகவை பொறுத்தவரை இராம.சுப்பையா முன்னாள் அமைச்சர். 

கல்லக்குடி போராட்டத்தால் சிறையில் இருந்த போது கலைஞர் அமைத்த அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பதால், இராமசுப்பையா அவர்களுக்கு நான் ,மட்டுள்ள இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் கொள்கை பேரன்கள் தான். அவருக்கு சட்ட மேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் கலைஞர். திமுகவிற்காக உழைத்தவர்களுக்கு கலைஞர் உரிய மரியாதை அளிப்பவர்.

 திராவிடம்னா என்னனு தெரியாத எடப்பாடி இயக்கத்தை அழிக்க பார்க்கிறார். திமுக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகவும் டெல்லியில் எதிர்கட்சியாகவும் உள்ளது. ஆனால் அதிமுக தமிழகத்தில் எதிர் கட்சியாகவும் டெல்லியில் பாசிச பாஜகவுக்கு அடிமை கட்சியாகவும் அதிமுக உள்ளது.

SIR என்பது திமுகவுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியை முறியடித்து 7வது முறையாக ஆட்சி அமைக்கும். புதிது புதிதாக கட்சி ஆரம்பித்து வருகிறார்கள் அப்படி பட்ட கட்சியின் தலைவர்களுக்கே வரலாறு கிடையாது. ஆனால் திராவிட இயக்க தொண்டர்களுக்கே எவ்ளோ பெரிய வரலாறு உண்டு என்பதற்கு சாட்சி தான் இந்த மேடை எனக் கூறினார்.

இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்... தமிழ்நாட்டுக்கு தான் அதிக ஆபத்து! அண்ணாமலை கடும் எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share