×
 

"ரொம்ப சந்தோஷம்"... என் பையன் அமைச்சராகிட்டாரு..! முன்னாள் சபாநாயகர் தனபால் பெருமிதம்..!

தனது மகன் அமைச்சராகியது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் ப. தனபால் அவர்களின் மகன் டி. லோகேஷ் தமிழ்செல்வன் சமீபத்தில் பெற்ற வெற்றி மற்றும் அமைச்சர் பொறுப்பு, பலரையும் புகழ்ந்து பேச வைத்துள்ளது. ப. தனபால் தமிழக அரசியலின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்ற சபாநாயகராகப் பொறுப்பேற்ற முதல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் அவர். அவிநாசி தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்குள் சாதி ரீதியான பாரபட்சம் அதிகரித்ததாக லோகேஷ் தமிழ்செல்வன் பின்னர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதிமுக தந்தைக்கு சீட் மறுத்த நிலையில், மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அதிமுகவில் இருந்து விலகினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

2026 பிப்ரவரியில் முதல்வர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தபோது, அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ராசிபுரம் (தனி) தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட லோகேஷ், அப்போதைய அமைச்சர் எம். மதிவேந்தனை சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய சட்டமன்ற உறுப்பினரானார். லோகேஷ் தமிழ்செல்வன் அதிமுகவில் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். இந்த நிலையில், முதலமைச்சரான விஜய், அமைச்சரவை விரிவாக்கத்தில் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியதுதான் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 'போர்வாள்"..! அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு...! அறிமுகம் செய்த EPS..!!

இந்த நிலையில், தனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சரானது பெருமகிழ்ச்சி கொடுக்கிறது என முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் தனக்கு வாய்ப்பு வழங்கியதை போல் தனது மகனுக்கு முதல்வர் விஜய் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். முதல்வர் விஜய் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி நேர்மையாக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் தனது மகன் தனது மகனுக்கு தனபால் அறிவுரை வழங்கியுள்ளார். சிறந்த தலைவர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்றும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மகனுக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அதிமுகவில் அதிகாரப்போர் தீவிரம்..! CV சண்முகத்தை பொளந்து கட்டிய EPS தரப்பு ஆதரவாளர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share