×
 
☰

தாராபுரத்தில் திடீர் ஷாக்... வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே சலசலப்பு... என்ன ஆச்சு?

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இடவசதி இல்லை என முகவர்கள் புகார்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் 21 சுற்றுகளாகவும், தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தாராபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இடவசதி இல்லை என்ற புகாரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சத்தியபாமா உள்ளிட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து, தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் கடந்த 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: ஆதிக்கம் செலுத்தும் தவெக.. வேகமெடுத்து நெருங்கும் திமுக!! பரிதாபத்தில் அதிமுக..!!

80.31 சதவீத வாக்குகள் பதிவு: 

தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,79,214 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 80.31 சதவீதமாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 89.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனுடன் ஒப்பிடும்போது, தற்போதைய இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 9.61 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.

23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை:

தாராபுரம் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணத் தொடங்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய இடவசதி இல்லை என்ற புகாரால் ஏற்பட்ட சலசலப்பு குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகவர்கள் புகார்: 

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இடவசதி இல்லை என்ற புகாரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் அமர இருக்கை வசதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது முகவர்கள் நிற்பதற்கு கூட போதுமான இடவசதி இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: ஒரே நாளில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? 2 இடைத்தேர்தல் முடிவை எதிர்நோக்கும் கட்சிகள்! நாளை ரிசல்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share