×
 

அப்பாடா..!! நிம்மதி பெருமூச்சு விட்ட சீமான்... டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு...!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் மீண்டும் இடைக்கால தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் நடைபெற்று வரும் சீமானுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவு. வழக்கில் இறுதி விசாரணை வரும் 20 ஆம் தேதி நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. வழக்கு விசாரணை 20 தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதல் பேரில் அவரது கட்சியினர் தம் மீதும், தம் குடும்பத்தினருக்கு எதிராகவும் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டுனர் இது குறித்து நடவடிக்கை கோரி திருச்சி மாவட்ட  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் டிஐஜி வருண் குமார்.

வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சீமான் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க  கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளைகள்  சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: சீமானுடன் ஓயாத பஞ்சாயத்து! வருண் குமார் ஐபிஎஸ் திடீர் டிரான்ஸ்பர்...

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்  விசாரணைக்கு இடைக்கால தடை
விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக மீண்டும் ஆகையால் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சீமான் தரப்பில்  இதற்கு சீமான்  தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாங்கள் தாக்கல் செய்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், வேண்டும் என்றே  கால தாமதம் செய்கின்றனர் என கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி , நீங்கள் ஒரு பெரிய பலமான கட்சி தானே,  பின் ஏன் கால அவகாசம் கேட்டால்  தயங்குகிறீர்கள் என்ன கேள்வி எழுப்பினார். அப்போது சீமான் தரப்பில், காவல் துறை அதிகாரி எங்கள் கட்சியை அபாயகரமான  கட்சி  யாசகம் கேட்கும் கட்சி என்று கூறி வருகிறார்.
எனவே ,  சீமான் மீதான  வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை 20 ஆம் தேதி நடைபெறும் யாரும் கால அவகாசம் கேட்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி வழக்கிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: செத்து சாம்பல் ஆனாலும் தனிச்சு தான் போட்டி! யாரும் அசைக்க முடியாது... சீமான் திட்டவட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share