சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!
பெத்த தாய்க்கும் தந்தைக்கும் துரோகம் செய்தவன் உற்ப்பட்டதாக சரித்திரம் கிடையாது எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்த யாரும் நல்ல விதமாக வாழ முடியாது என பேசி கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் நாகல் நகரில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், சண்டாள பாவிகள் ஆட்சிக்கு வந்து பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து 2500 ரூபாய் கொடுக்கின்றேன் என கூறினார்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. அதைப்பற்றி சட்டசபையில் பேசவில்லை. விவசாயிகளுக்கு முழு கடனை ரத்து செய்வேன் என கூறினார்கள் ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை.
மகளிருக்கு 2500 ரூபாய் என்ன ஆனது என செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி கேட்கின்றது. ஏம்மா நீ ஏதும் போதையில் இருந்தாயா? சரி விடு பேசுவதை கேளு. காவிரி பிரச்சனைக்காக கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் பார்க்கப்போவதாக சொன்னார் கடைசியில் நானாகத்தான் சொன்னேன் என கூறுகிறார் சிவக்குமார் வரவேண்டாம் எனக் கூறுகிறார் இது எல்லாம் வேஷம் நமக்கே தெரிகிறது எம்ஜிஆர் காலத்தில் இருந்து காவேரி பிரச்சனை ஓடுகிறது.
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்வேன் என சொல்லி ஆட்சிக்கு வந்த விஜய் தள்ளுபடி செய்யாததை வன்மையாக கண்டிக்கின்றோம். மேகதாது அணை கட்டுவதை தடுக்காத விஜயை கண்டிக்கின்றோம்.
இதையும் படிங்க: மக்கள் மன்னிக்க மாட்டாங்க CM..! போதைப் பொருள் புழக்கம்... விஜய் அரசை பந்தாடிய லியோனி.!!
நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், வேலுச்சாமி, ரவி மனோகரன், ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி இடம் மன்னிப்பு கேட்டு செய்தித்தாளில் வெளியிட்டு டிவியில் வெளியிட்டு வந்தால் அவர்களுக்கு மன்னிப்பு உண்டு இதை முடிவு செய்ய வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி.
கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காத காரியம் கட்சித் தொண்டர்கள் யாரும் அவர் பின்னால் செல்ல மாட்டார்கள்.
நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, சி.வி சண்முகம் விஜயபாஸ்கர் எத்தனை பேர் போனார்களோ அவர்கள் மீது எல்லாம் வழக்கு உள்ளது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.
*இது எல்லாம் ஒரு பிழைப்பா, இப்படியும் வாழ வேண்டுமா, இப்படியெல்லாம் பிள்ளை குட்டிகளை வளர்க்க வேண்டுமா, பேரன் பேத்திகளை படிக்க வைக்க வேண்டுமா, நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நீங்கள் நான் எல்லாரும் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ வேண்டுமென எம்ஜிஆர் சொல்லி உள்ளார் .
இவர்கள் வானத்தில் இருந்து குதித்து அண்ணா திமுகவை கண்டுபிடித்தவர்கள் போல் எல்லோரும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
அண்ணா திமுகவின் ரத்தம் எம்ஜிஆர் இரத்தம் ஜெயலலிதாவின் ரத்தம் எடப்பாடி ரத்தம் நமது உடம்பில் ஊறுகிறது என்று சொன்னால் அண்ணா திமுகவில் தான் இருப்பார்கள்.
நம்ம கூட இருப்பவர்களுக்கு என்றுமே அழிவு கிடையாது.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அந்த ரகசியத்தை நான் இப்பொழுது சொல்ல மாட்டேன் எடப்பாடி யார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் அன்று சீனிவாசன் சொன்னார் என எடப்பாடி முதலமைச்சர் ஆன பின்பு நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள்.
எத்தனை தப்பு செய்தாலும் பெத்த தாய்க்கும் தந்தைக்கும் துரோகம் செய்தவன் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது.
இதை பேசும் பொழுது சீனிவாசன் கண்கலங்கினார்
எம்ஜிஆர் அம்மா மூத்த புதல்வன் எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்த யாரும் நல்ல விதமாக வாழ முடியாது முடிவு எப்படி இருக்கும் என்பதை குடும்பங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.என பேசினார்".
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது..!! கடிதம் எழுதுவது மட்டும் போதாது..! மீனவர்கள் கைது விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!