×
 

"அப்படி என்ன தான் இருக்கு...” - ஜனநாயகனுக்காக கொந்தளித்த அமீர்... சென்சார் போர்டுக்கு சரமாரி கேள்வி...!

தேர்தல் நேரத்தில் ஒரு படம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப்படத்தில் என்ன பிரச்னை உள்ளது என இதுவரை தணிக்கை துறை தெரிவிக்கவில்லை.

வளைகுடா நாடுகளில் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மதுரையில்  இஸ்லாமியர் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  மதுரை மாவட்ட JAQH(ஜாக்) அமைப்பின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானைம் திடலில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிறுவர்கள், பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர். இயக்குனர் அமீர் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார். சிறப்பு தொழுகைக்கு பின்னா் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் உட்சபட்ச அதிகாரம் கொண்டது. தேர்தல் நேரத்தில் ஒரு படம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப்படத்தில் என்ன பிரச்னை உள்ளது என இதுவரை தணிக்கை துறை தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

ஜனநாயகனில் என்ன இருக்கு என யாருக்கும் தெரியவில்லை. 2014ல் பிறகு பாஜக ஆதரவு படங்கள் நிறைய வெளியாகி உள்ளது. ஜனநாயகனில் எதிரான காட்சிகள் இருந்திருக்கலாம்.  இரண்டு தரப்பும் படத்தில் என்ன இருக்கிறது என சொல்லவில்லை.

காட்சிகளை கட் செய்ய தணிக்கை துறைக்கு அதிகாரமில்லை. தமிழகத்தில் ஒரு விதி வடஇந்தியாவில் ஒரு விதி தணிக்கை துறையில் உள்ளது. ஜனநாயகனில் அரசியல் நடவடிக்கை உள்ளது எனக்கூறினார். 

இதையும் படிங்க: 41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share