×
 

தவெகவையும், விஜயையும் விமர்சிக்க மாட்டேன்!! பல்டி அடித்த சுந்தர்.சி!

தவெக பற்றியும், விஜய் பற்றியும் விமர்சிக்க மாட்டேன் என மதுரை மத்திய தொகுதியில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜ) சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியை எந்த வகையிலும் விமர்சிக்க மாட்டேன் என்று தெளிவாக அறிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய சுந்தர் சி, “இதுவரை பல பேட்டிகள் கொடுத்திருக்கிறேன். ஆனால் இப்போது முற்றிலும் மாறுபட்ட களத்தில் இருந்து பேட்டி கொடுக்கிறேன். இது எனக்கு ரொம்ப சந்தோஷமான செய்தி. மதுரை மத்திய தொகுதி மக்கள் நல்ல செய்தியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

மேலும், “மதுரை மத்திய தொகுதி மக்கள் வெற்றிக் கனியைத் தருவார்கள். இனி ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் மதுரையில்தான் இருப்பேன். திரைப்படத் துறையில் 30 வருடங்களாக வேண்டும் என்ற அளவுக்கு பணியாற்றியிருக்கிறேன். எனது அடுத்த கட்ட நகர்வு தேர்தல் முடிவுகளைப் பொறுத்துதான் இருக்கும். கண்டிப்பாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

வன்முறை குறித்து பேசிய சுந்தர் சி, “எந்த வகையிலும் வன்முறை தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. வன்முறை அசிங்கமான விஷயம். என்னைப் போன்ற பொது மக்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு இப்படிப்பட்ட சம்பவங்கள்தான் காரணம். இப்படியே போனால் நாடு எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை” என்றார்.

விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சுந்தர் சி மிகுந்த பக்குவத்துடன் பதிலளித்தார். “விஜய் என் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். நானும் அவரை அப்படித்தான் நினைக்கிறேன். எனது மனைவியை விஜய் ‘அக்கா’ என்று அன்பாக அழைப்பார். அவரும் விஜயை ‘தம்பி’ என்று கருதுகிறார். எனவே, விஜய்யை விமர்சிக்கவோ, அவரது கட்சியைப் பற்றி பேசவோ, அவரது வேட்பாளர்களைப் பற்றி சொல்லவோ நான் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

எனினும், மதுரை மத்திய தொகுதியில் போட்டி இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் இடையில்தான் என்று சுந்தர் சி சுட்டிக்காட்டினார். “அவர்களுக்கு நான் ஆதரவு அளித்து பிரசாரம் செய்திருக்கிறேன். அவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்” என்றார்.

திரைப்படத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுந்தர் சி, அரசியல் களத்தில் இறங்கியிருப்பது மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது “விஜய்யை விமர்சிக்க மாட்டேன்” என்ற அறிவிப்பு, தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்புனீங்களா? கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜியை திணறடித்த சிபிஐ கேள்விகள்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share