×
 

அன்புமணியை என்ன செய்ய காத்திருக்கிறார்களோ?- ராமதாஸ் உடன் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தீவிர ஆலோசனை...!

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் மருத்துவர் ராமதாசிடம் வழங்கப்பட்டு அவர் முடிவு செய்வார் என அருள் தெரிவித்தார். 

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ள பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மக, ஸ்டாலின், துரை, சதாசிவம்,  நெடுஞ்கீரன், பானுமதி சத்தியமூர்த்தி, திருமலை குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாமகவில் 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமாக இது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றஞ்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அந்த குற்றஞ்ச்சாட்டுகளுக்கு  பதலளிக்க நோட்டீசாக அன்புமணிக்கு அனுப்ப பட்ட நிலையில், முதல் கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளும் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் மீண்டும் நோட்டீசாக அன்புமணிக்கு அளிக்கபட உள்ளது.

கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் முதல் முறையாக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தப்படுவதால் இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் மருத்துவர் ராமதாசிடம் வழங்கப்பட்டு அவர் முடிவு செய்வார் என அருள் தெரிவித்தார். 

இதையும் படிங்க: எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு

இதையும் படிங்க: அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்! விளக்கம் தரலனா... ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share