சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!
கர்நாடக முதல்வர் டி. கே. சிவக்குமார் சென்னை வருகிறார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை நோக்கி வருகிறார். வருகிற 20ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுடன் காவிரி விவகாரம் குறித்து பேசக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரவியுள்ளது.
இந்த சந்திப்பு தென் மாநிலங்களுக்கிடையேயான உறவுகளிலும், நீண்டகாலமாக தொடரும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.தென் மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களையும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கிய ஒரு முக்கியமான அமைப்பு. மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், பொதுவான பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண்பதும் இதன் நோக்கம்.
இந்த ஆண்டு 31வது கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முக்கியப் பங்காற்றுவார் என்பது உறுதியாகிவிட்டது.சிவக்குமார் டெல்லியில் காவிரி தொடர்பான சட்ட ஆலோசகர்களைச் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!
அங்கிருந்து நேரடியாக சென்னைக்கு வரும் அவர், மாமல்லபுரக் கூட்டத்திற்கு பின்னர் தமிழக முதலமைச்சரைச் சந்திக்க வாய்ப்புள்ளது. காவிரி நீர் விவகாரம் இப்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதே நேரத்தில், இரு மாநிலங்களும் பரஸ்பர புரிதலுடன் பிரச்சினையை அணுக வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!