×
 

கரூரின் ராஜாவா நீ?... செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த்...!

கரூரில் அரசியல் சூழ்ச்சியில் சிக்கி 41 பேர் உயிரழந்ததாகவும் இதற்கு ஆளும் கட்சியும் விஜயம் தான் பொறுப்பு எனவும் தர்மபுரியில் நடைபெற்ற தேமுத்தீக்க பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் குறித்த நேரத்தில் வரவில்லை - விஜய்க்கு மக்கள் காத்திருக்கின்றனர் என்ற பொறுப்பு வேண்டாமா? தன்னுடைய கடமை உணர்வை தவறவிட்டவர் விஜய் - ஆனால் அவர் சூட்டிங்குக்கு சரியாக சென்று விடுவார் - விஜயை நம்பி வந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் - ஆனால் அவர் இன்று வரை வெளியில் வராமல் இருப்பது தவறு எனக்கூறியுள்ளார். 

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் சம்பவத்தில் தமிழக அரசு மற்றும் விஜய் இருவர் மீதும் தவறு உள்ளது என அடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


கரூரில் அரசியல் சூழ்ச்சியில் சிக்கி 41 பேர் உயிரழந்ததாகவும் இதற்கு ஆளும் கட்சியும் விஜயம் தான் பொறுப்பு எனவும் தர்மபுரியில் நடைபெற்ற தேமுத்தீக்க பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். கூட்டத்தில் லைட் ஆப் பண்ணப்பட்டது ஆம்புலன்ஸ் வந்து சென்றது கல்வீச்ச ஆகியவை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர் காலதாமதமாக வந்தது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் திரும்பியதும் விஜய் செய்த தப்பு என பேசினார். அந்த 41 உயிர் போனதுக்கு ஆளும் ஆட்சியாளர்களும் காரணம், விஜயும் காரணம் எனக்கூறினார், 

இதையும் படிங்க: #BREAKING செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக ஆசைப்பட்டால்... செம்ம ட்விஸ்ட் வைத்த உச்ச நீதிமன்றம்...!

பக்காவா ஸ்கெட்ச் போட்டு 41 உயிர்களை எடுத்ததுதான் இந்த ஆட்சியாளர்கள் செய்த சாதனை. விஜய் வந்தால் 10 நிமிஷம் தான் பேசுவாரு. நம்பள மாதிரி என்ன 4 மணி நேரமா பேசப்போறாரு. அப்போ போய் மக்களை நெருக்க, ஆம்புலன்ஸ் விடுறது, கல்லால அடிக்கிறது, கரண்ட் கட் பண்றதுன்னு எத்தனை பிரச்சனையை கிளப்புறீங்க. இதையெல்லாம் யார் பண்ணதுன்னு பார்த்தால், ஒருத்தர் இருக்காரு. இத்தனை பிரச்சனைக்கு காரணம் மிஸ்டர் பத்து ரூபாய். விஜய் அதைத்தான் பாட்டா பாடிட்டு போயட்டாரு. ஒவ்வொரு வாட்டி நான் கரூருக்கு போகும்போதும் 10 ரூபாய் அமைச்சரை பேசாமல் வந்தது இல்லை. கரூருக்கு என்ன ராஜாவா நீ?. ஜெயிலுக்கு போய்ட்டு, வேன் படுத்து நெஞ்சுவலின்னு நடிச்சிட்டு, பேண்ட் எல்லாம் யூரின் போய்ட்டு பண்ணாரு இல்லையா?. இப்ப எங்க இருந்து வந்தது வீராப்பு. இதெல்லாம் ஆட்சியில் இருக்குறதால வர்ற மமதை. “ஆடாதடா ஆடாதடா மனிதா ஆட்டம் போட்ட அடங்கிடுவ மனிதா” என்பது நிச்சயம் மக்கள் உங்களுக்கு உணர்த்துவார்கள். 

இன்னைக்கு அந்த 41 குடும்பத்தை போய் பாருங்க எவ்வளவு துக்கத்துல தங்கள் உண்மையான அன்புகளை இழந்துட்டு வாடுகின்றனர். ஒன்ரை வயசு குழந்தை என்னயா பண்ணுச்சு, என்ன பண்ணுச்சு?, இளைஞர்கள் , பெண்கள், குழந்தை எல்லாம் போயிருக்காங்க பாருங்க.  பிச்சு குழந்தைங்க பார்த்தாலே எனக்கு வயிறு பத்தி எரியுது. நான் நேரடியாக போயே ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திச்சு ஆறுதல் சொல்லி நம்மளால முடிஞ்ச பொருட்களை அந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனவங்களுக்கு கொடுத்து, இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டுதான் வந்தேன். அதனால அந்த மக்கள் நம்மகிட்ட சொன்ன உண்மைதான் சொல்றேன். 

ஒரு போலீஸ் இல்லாமல், அங்க ஒரு பாதுகாப்பு இல்லமால் நெருங்கியே கொன்னுட்டாங்கன்னு மக்கள் சொல்லுறாங்க. இதில் போலீசை சொல்லித் தப்பில்லை. அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். அதே மாதிரிதான் விஜய்க்கும் நான் சொல்றேன். நீங்க லேட்டா வந்தது தப்பு விஜய் நீங்க பார்க்காம அன்னைக்கு ஓடி போய் வீட்டுக்குள்ள புகுந்துகிட்டது தப்பு. இன்னைக்கு வரைக்கும் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லாதது தப்பு. நீங்க போய் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்காதது தப்பு என விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share