கட்சி தொண்டன் இப்படித் தான் செருப்பு வீசுவானா? - ஆவேசமான பிரேமலதா விஜயகாந்த்...!
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் சம்பவத்தில் தமிழக அரசு மற்றும் விஜய் இருவர் மீதும் தவறு உள்ளது என அடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே தேமுதிக சார்பில் மக்களை தேடி மக்கள் தலைவர் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர்களை பலி கொடுத்து இருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
கரூர் சம்பவத்தில் அரசு மீதும் தவறு உள்ளது விஜய் மீதும் தவறு உள்ளது. அதில் அரசு மீது உள்ள தவறுகள் என்னவென்றால் கரூரில் அவ்வளவு குறுகலான சாலையில் பேச அனுமதி கொடுத்தது யாரு, ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட்டத்தில் அனுமதித்தது யாரு, ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, விஜய் பேசும் போது யார் செருப்பு, கல் வீசியது இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும், செருப்பு வீசிய நபரை கண்டறிந்தும் ஏன் இதுவரை கைது செய்யவில்லை? இதை யாரும் கேள்வி கேட்காமல் உள்ளனர். கட்சி தொண்டன் அப்படி செருப்பு வீசுவானா?, உள்ளூர் ரவுடிகள் தான் அந்த காரியத்தை செய்துள்ளனர். அதை செய்ய வைத்தது 10 ரூபாய் அமைச்சர் தான். அங்கு பக்கா ப்ளான், பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். யார் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும். அங்கு கூட்டத்தை கட்டுபடுத்த போதிய காவல்துறை இல்லை, ஆட்சியாளர்கள் வருகிறார்கள் என்றால் பத்தாயிரம் போலீசார் நிற்கின்றனர் என அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதே போல் விஜய் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறித்த நேரத்தில் விஜய் வரவில்லை, விஜய்க்கு மக்கள் காத்திருக்கின்றனர் என்ற பொறுப்பு வேண்டாமா, தன்னுடைய கடமை உணர்வை தவறவிட்டவர் விஜய், ஆனால் அவர் சூட்டிங்குக்கு சரியாக சென்று விடுவார், நாங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது எங்களுக்கு சப்போர்ட் கிடையாது. ஆனால் நாங்கள் அமைத்த தொண்டர் படை தான் மக்களை பாதுகாத்தது. அதே விஜய் சார்பில் 10,000 பேர் நிறுத்தி கயிறு கட்டி கூட்டத்தை கட்டுபடுத்த வேண்டும். அதே போல் கரண்ட் நிறுத்தப்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, ஜெனரேட்டர் ஆப் ஆனது தான் காரணம் என கூறுவது பொய்.
இதையும் படிங்க: விஜயை கைது செய்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பிரஸ் மீட்...!
அத்தனை மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிபட்டனர், நம்பி வந்தவர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும். அதே போல் விஜய் பேருந்துக்குள் புகுந்துகொள்கிறார். அவரை காண வேண்டும் என நிற்கும் மக்களுக்காக ஒரு 4 மணி நேரம் நின்று கொண்டு வரவேண்டியது தானே. விஜயகாந்த் அவர்களை அண்ணன் என கூறும் விஜய் அண்ணனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். விஜயை நம்பி வந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், ஆனால் அவர் இன்று வரை வெளியில் வராமல் இருப்பது தவறு, வெளியில் வந்தால் கைது செய்வார்களா, கைது செய்து கொள்ளட்டும்.
மஹா மகத்தில் மக்கள் சாகவில்லையா, கள்ளகுறிச்சியில் கள்ளசாராயம் குடித்து சாகவில்லையா, கரூர் சென்றவர்கள் ஏன் கள்ளகுறிச்சிக்கு செல்லவில்லை, இது அணைத்துக்கும் பின்னால் அரசியல் உள்ளது, இங்கு எல்லாமே அரசியல் தான் இதை மக்கள் புரிந்துகொள்ளுங்கள் என பேசினார்.
இதையும் படிங்க: கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி... போட்டாச்சு CASE! யார் மேல தெரியுமா?