×
 

தமிழகத்துக்கு பாஜகவை அறிமுகப்படுத்தியதே தேமுதிக தான்... எல்.கே.சுதீஷ் காட்டம்...!

2014 ல் தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பதாக சொன்னதே தேமுதிக தான் மணப்பாறையில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் 21 ம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் உள்ளம் தேடி, இல்லம் நாடி பயணம் ஆகிய முப்பெரும் விழா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுக்கூட்டத்தி;ல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் சுதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சுதீஷ், 2009 ம் தேதி தேமுதிக 11.3 சதவிகிதம் வாக்குகளை பெற்ற போது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி குறித்து பேசினர். ஆனால் அப்போது இருந்த ஜெயலலிதா 234 சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவித்து விட்டார்கள்.

நாங்கள் உடனே ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினோம். அதற்கு பிறகு ஜெயலலிதா அதனை ரத்து செய்து விட்டு விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று சொன்னார்கள். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் இன்றைய எடப்பாடி பழனிச்சாமிக்காக கூறுகின்றேன் என்றார். பிறகு கூட்டணி வெற்றி பெற்றது நாமும் எதிர்கட்சியாக இருந்தோம் என்று பேசினார்.

இதையும் படிங்க: என்ன நடக்க போகுதோ? செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு...

தொடர்ந்து பேசிய அவர், 2014 ல் தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பதாக சொன்னதே தேமுதிக தான். ஒவ்வொரு பகுதியிலும் தாமரை, மோடி என்று தொடர்ந்து விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கூறி வந்தனர். தேர்தல் நேரத்தில் 45 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுபயணம் செய்தவர் விஜயகாந்த் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈடு இணையில்லா தலைமகன் அண்ணா! மக்களுக்கான ஆட்சி நிலவ உறுதி ஏற்போம்... இபிஎஸ் சூளுரை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share