முதல்வர் முகத்தை மூடிக்கணும்... எதுக்கு சொன்னோம் தெரியுமா? அதிமுக விமர்சனம்
முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக முகத்தை மூடிக்கொண்டு செல்லவேண்டும் என கூறியதற்கு அதிமுக விளக்கம் அளித்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார். நேற்று மதியம் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இபிஎஸ் கலந்துரையாடினார். முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலையில் திமுக ஈடுபடுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தான் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் என அதிமுக விமர்சித்தது. மக்கள் மத்தியில் 525 வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு அதில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செல்பவர்கள் தான் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளது
கள்ளச்சாராயத்தால் 68+30= 98 பேரைக் கொன்றுவிட்டு இன்னமும் அதுவும் கோர்ட் பக்கத்திலேயே கள்ளச்சாராயம் விற்கும் நீங்கள் தான் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவம் பார்க்க வந்தவர்களை ஏமாற்றி கிட்னி திருடி வயிறு வளர்க்கும் திமுகவினர் நீங்கள் தான் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மாநில சுயாட்சி பற்றியெல்லாம் மானாவரியாய் பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த இந்த 4 வருடத்தில் ஒரே ஒரு முறை கூட, முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க வக்கில்லாத, நீங்கள் தான் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் எனவும் கஞ்சாவையும் போதைப்பொருளையும் தெருவெங்கும் ஓடவிட்டு, கனிமவளத்தை பாதுகாக்கும் பொருட்டு குரலெழுப்பும் சமூக ஆர்வலர்களை பட்டப்பகலில் வெட்டிக்கொல்லும் நீங்கள் தான், முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: “பார்த்தீங்களா உங்க தலைவர் லட்சணத்த... இனியாவது உஷாரா இருங்க”.. அதிமுகவினரை அலர்ட் செய்த திமுக அமைச்சர்..!
நீட்டை ரத்து செய்து விடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு, ஐயா ஆமாங்க எங்களால முடியல என ஒப்புதல் வாக்குமூலம் தந்த நீங்கள் தான் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டும் என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: நீங்க தான் மூடிக்கணும் ஸ்டாலின்! அந்த அவசியம் எங்க அண்ணனுக்கு இல்ல... கொந்தளிக்கும் அதிமுக