×
 

200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

தவெக ஆட்சியை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழகத்தில் சுமார் 200 கொலைகள், 10-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள், சுமார் 400 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தினம்தோறும் 2.5 வயது குழந்தை முதல் 85 வயது முதியவர் வரை பாலியல் வன்கொடுமை கொலைகள், 10-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் என தமிழ்நாட்டை பாதுகாப்பில்லாத மாநிலமாக முதல்வர் விஜய் மாற்றியதாக குற்றம்சாட்டி உள்ளார்.

"ஓவ்வொரு காவல் நிலைய மரணமும் அந்த ஆட்சியின் தோல்வி" என உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மறந்து உங்கள் தோல்வி ஆட்சித் தொடர வேண்டுமா CM sir? என்று கேட்டுள்ளார். 100வது நாள் சாதனை என்று கூறி வரும் நிலையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வரைச் சுற்றியுள்ள நான்கு நண்பர்களும் இயக்குநர்களாக உருவாகி, 100 நாட்களில் விஜய்யை வைத்து ரீல்ஸ் எடுத்து சீரியல் தயாரித்து முதல்வரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வாக்களித்த மக்களை ரீல்ஸ் பார்க்க வைத்திருப்பது மிகப்பெரிய அவமானமாக இல்லையா என்று கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: 100 நாள் ஆட்சியில் அமைச்சர்களை ஓடவிட்டதே சாதனை..!! தவெக அரசை விமர்சித்த பரந்தாமன்!!

போதைப்பொருள் பழக்கத்தைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்த அமுதன் மற்றும் தினேஷ் உள்ளிட்ட மாணவர்கள் போதைப்பொருள் கும்பலால் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்போடு எதிர்க்கட்சித் தலைவருக்கும், நாட்டு மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய முதல்வர், சட்டசபையில் சினிமா பாணியில் தனக்குப் பதிலாக ‘டூப்’களை பதில் சொல்ல வைத்து தமிழகத்தையே தலைகுனிய வைத்துவிட்டு ஓடி ஒளிவது வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: துரைமுருகனுக்கு அடுத்து யார்? உதயநிதியை சுற்றி புதிய பதவி பேச்சு.. அறிவாலயத்தில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share