×
 

இன்று வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்... யாருக்கெல்லாம் வாய்ப்பு? - எகிறும் எதிர்பார்ப்பு...!!

திமுகவில் கூட்டணி கட்சிகளால் தொகுதி பங்கீட்டில் நிலவி வந்த இடியாப்ப சிக்கலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததோடு முதல்  மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்ட கையோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கும் சென்றுவிட்டார். திமுகவில் கூட்டணி கட்சிகளால் தொகுதி பங்கீட்டில் நிலவி வந்த இடியாப்ப சிக்கலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த முறை திமுக 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இதில் 11 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அப்படி பார்த்தால் திமுகவின் தொகுதி எண்ணிக்கை 175 ஆகும். மீதமுள்ள 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடப்பட்டுள்ளது. காங்கிரஸ்: 28 தொகுதிகள் தேமுதிக 10 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட்  5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள் (இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் தீப்பெட்டி சின்னத்திலும் போட்டி), கொமதேக  2 தொகுதிகள் (உதயசூரியன் சின்னம்), மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் (உதயசூரியன் சின்னம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகள், எஸ்டிபிஐ  1 தொகுதி (உதயசூரியன் சின்னம்), மனிதநேய ஜனநாயக கட்சி 1 தொகுதி (உதயசூரியன் சின்னம்), முக்குலத்தோர் புலிப்படை: 1 தொகுதி (உதயசூரியன் சின்னம்) 


தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக முடிந்துள்ள நிலையில், இன்று  மாலைக்குள் திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

1.கொளத்தூர்- முக.ஸ்டாலின் 
2. சைதாபேட்ட - மா. சுப்பிரமணியன் 
3. துறைமுகம்- சேகர்பாபு 
4. ஆயிரம் விளக்கு- Dr. எழிலன் 
5.மதுரை மத்தி- பழனிவேல் தியாகராஜன் 
6. திருச்சி மேற்கு- KN. நேரு 
7.மன்னார்குடி - TRB ராஜா 
8. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி 
9. திருப்பத்தூர்- பெரியகருப்பான் 
10. ராமநாதபுரம்- காதர் பாட்சா முத்துராமலிங்கம் 
11.திருச்சுழி- தங்கம் தென்னரசு 
12.மதுரை கிழக்கு- மூர்த்தி 
13.தூத்துக்குடி- கீதா ஜீவன் 
14. திருச்செந்தூர்- அனிதா ராதா கிருஷ்ணன் 
15. பழனி- ip செந்தில்குமார் 
16.ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி 
17.திருவண்ணாமலை- எவ வேலு 
18.குறிஞ்சிப்பாடி- MRK பன்னீர்செல்வம் 
19.திருமங்கலம்- சேடப்பட்டி மணிமாறன் 
20.குன்னம்- ss சிவசங்கர் 

இதுதான் இன்றைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.  எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கனவே தனது முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், திமுகவின் இந்த 164 வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் காட்டுத்தீயாய் பரவியுள்ளது. 

இதையும் படிங்க: அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share