ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!
விழுப்புரம், விக்கிரவாண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் தெற்கு ஆகிய இடங்களிலும் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அல்லது முக்கிய நிர்வாகிகள் மீண்டும் சீட் எதிர்பார்த்து செயல்பட்டு வருகின்றனர்.
நீண்ட கால அரசியல் பிணக்குகளுக்குப் பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த பிரேமலதா, கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். இதையடுத்து, எந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என திமுக தலைமையிடம் பட்டியல் வழங்கியுள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரேமலதா 12 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்திய நிலையில், ஸ்டாலின் “தற்போதைய சூழலில் 6+1 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும். கூட்டணிக் கட்சிகள் யாராவது விலகினால் 8 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெறும் சீட் அல்ல, வெற்றியையும் சேர்த்து தருகிறோம்” என நம்பிக்கை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், “உங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலைக் கொடுங்கள், ஆய்வு செய்து முடிவு தெரிவிக்கிறோம்” எனவும் கூறியுள்ளார்.
பிரேமலதா வழங்கிய பட்டியலில், தனது சகோதரர் சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கோரியுள்ளார். தனக்காக ரிஷிவந்தியம் அல்லது விருத்தாச்சலம்; விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் அல்லது சாத்தூர்; எல். வெங்கடேசனுக்கு விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி; பார்த்தசாரதிக்கு விருகம்பாக்கம்; அனகை முருகேசனுக்கு பல்லாவரம்; இளங்கோவனுக்கு பாப்பிரெட்டிப்பட்டி; அழகாபுரம் மோகன்ராஜுக்கு சேலம் தெற்கு என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அந்தம்மா மாநாடு நடத்தும் போது அப்படி கேட்டாங்க... அந்த கூட்டணி வெளங்குமா?” - பிரேமலதா விஜயகாந்தை விளாசிய இபிஎஸ்...!!
ஆனால், இந்த தொகுதிகளில் ஏற்கெனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக வேலை செய்து வருவதால், பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. உதாரணமாக, விருத்தாச்சலம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் திமுகவின் கார்த்திகேயன் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். விருதுநகரில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சாத்தூரில் மதிமுகவின் ரகுராமன் அல்லது முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் போட்டியிடத் தயாராக உள்ளனர். விழுப்புரம், விக்கிரவாண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் தெற்கு ஆகிய இடங்களிலும் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அல்லது முக்கிய நிர்வாகிகள் மீண்டும் சீட் எதிர்பார்த்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனால், தேமுதிக கேட்கும் தொகுதிகள் அவர்களுக்குக் கிடைத்தால், அங்கு நீண்ட காலமாக உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். அவர்களுக்கு மாற்றுத் தொகுதி வழங்கப்படுமா அல்லது தேமுதிக தனது பட்டியலை மாற்றுமா என்பதே தற்போது அறிவாலயத்தில் சூடான விவாதமாகியுள்ளது.
இதையும் படிங்க: எந்தெந்த தொகுதிகள்? திமுகவிடம் தேமுதிக உத்தேச பட்டியல் கொடுத்ததாக தகவல்..!!