×
 

“ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!

ஆல் ரவுண்டர் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மத்திய அரசு மூலமாக 136 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களிடையே அவர் உரையாற்றியதாவது: மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்குவதற்கு சில ஈடுபட்டு வருகிறார்கள். அதை மகளிர் முறியடித்து காட்டியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஒரு கோடியே 32 லட்சம் மகளிர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாயை கொடுத்திருக்கிறார்கள். கோடைகால சிறப்பு நிதியாக கைம்பெண், முதியோர், மாற்றுத்திறன் கணக்குகளில் 38 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சமஸ்கிருதத்துக்கு ரூ.2,500 கோடி; தமிழுக்கு ரூ.147 கோடி... மத்திய அரசின் மாற்றாந்தாய் மனநிலையை போட்டுடைத்த உதயநிதி....!

இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசியல் செய்து கொடுத்து இருக்கிறது. 2023ல் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டித் தர இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 431 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதனால் 4 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில் சுமார் 306 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

36 கோடி மினி டைட்டில் பார்க்கும் தூத்துக்குடிக்கு கிடைத்திருக்கிறது இதே போல் நிறைய திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம் இதே போல் திட்டங்களால் தமிழ்நாடு இந்தியாவில் வளர்ந்து வரும் மாநிலமாக முதல் மாநிலமாக இருக்கிறது. 

மகளிர் சுய உதவி குழு மகளிருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் வேலை தேடும் நிலைமை மாறி மகளிர் நாலு பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் உயர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் ஐடி கம்பெனியில் கொடுப்பது போல் பெயரோடு ஐடி கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காடுகள் நீங்கள் வாங்கி இருப்பீர்கள் இதை முறையாக பயன்படுத்துங்கள். 

கலைஞர் கனவு இல்லம் மற்றும் பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிய கலைஞர் பெயரில் சாமானிய மக்களுக்கான வீடுகளை தந்திருக்கிறார்கள். குடியிருக்க வீடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த வீட்டிற்கான பட்டா மிக மிக முக்கியம் பட்டா கொடுக்கும் நடைமுறைகள் எல்லாம் முதலமைச்சர்கள் எழுதி இருக்கிறார். அதனால் 21 லட்சம் மக்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பட்டா கொடுத்திருக்கிறார்கள். பட்டா என்பது உங்களுக்கு அரசு கொடுக்கின்ற சலுகை கிடையாது. அது உங்களின் உரிமை, அந்த உரிமையை அரசின் நிலைநாட்டி உள்ளது. 

பட்டா பெற்ற உங்கள் அத்தனை பேருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு நிறைய மாற்றுத்திறனாளிகள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு வேண்டிய சலுகைகள் அது உங்கள் உரிமை என முதல்வர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.அதனால் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி முழுவதும் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் கேட்கக்கூடிய இடத்திலிருந்து குரல் கொடுக்கக்கூடிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இன்று மோட்டார் வாகனம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு கொடுத்திருக்கிறது. அதனால் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கு என்றுமே இந்த அரசு பக்கபலமாக இருக்கும்.

அதேபோல் முதலமைச்சர் அவர்கள் மீனவ மக்களின் குறைகளையும் நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் கடலோர மீனவ மக்களின் உட்டட அமைப்பு வசதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மீன்பிடி துறைமுகங்கள் மீன் இறங்குதலங்கள் மீன் சந்தைகள் எல்லாம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 5 ஆயிரத்திலிருந்து 8000 ரூபாயாக உயர்த்தி கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக அடிக்கல் நாட்டியிருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிறுவைகுண்டம் தொகுதிகளில் தல 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் உட்பட சுமார் 8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு விளையாட்டு திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கட்டமைப்பு இன்னும் அதிகமான விளையாட்டு வீரர்களை தூத்துக்குடியில் இருந்து நிச்சயம் உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

இப்படி ஆல் ரவுண்டர் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது எனக்கூறினார்.  இதுவரை மூன்று லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் இடைநிறுத்த முற்றிலும் நிறுத்தப்படும் 

தமிழக வளர்ச்சிக்கு இன்னும் ஏராளமான திட்டங்கள் திராவிட மாடல் 2.0-வில் முதலமைச்சர் வழங்குவார் எனவே முதலமைச்சரவர்களுக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தர வேண்டும் நலத்திட்டங்களை பெற்று உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறி உரையை முடித்தார்

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை உயர்வு...‘மகிழ்ச்சி’, ‘அதிர்ச்சி’ விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share