மீண்டும் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு... திமுக போடும் தேர்தல் கணக்கு!
எங்க தரப்புக்கு பிரதிநிதித்துவத்தை குறைச்சிட்டீங்களேன்னு ஒரு சமுதாய எம்எல்ஏக்கள் வருத்தத்தில இருக்காங்களாம். சீக்கிரமே இது சம்பந்தமா முதல்வரையும் சந்திக்க இருக்காங்களாம்.
சமீபத்துல அமைச்சரவை மாற்றம் செய்றதுக்கு முன்னாடி கவுண்டர் சமுதாயத்திலிருந்து முத்துசாமி, சக்கரபாணி, சாமிநாதன், செந்தில் பாலாஜின்னு நான்கு அமைச்சர்கள் இருந்தாங்க. செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கவுண்டர் சமுதாயத்திற்கான பிரதிநிதித்துவம் மூணா குறைஞ்சிருக்கு. ஏற்கனவே கவுண்டர் சமுதாயம் அதிகமா வசிக்கக்கூடிய கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக்க கட்சிகள் பலமா இருக்கிறதா சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், திமுக அங்கு வலுவாக தடம் பதிக்க பலவிதமான திட்டங்களை தீட்டி வருது. இந்த நிலையில் கவுண்டர் சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட அமைச்சர்களுடைய எண்ணிக்கையை குறைந்ததில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.
கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அமைச்சர்களே இல்லாத மாவட்டங்களில் இருக்கிற நிலையில், எங்களை ஒருத்தர அமைச்சராக போட்டிருந்தால் எங்க சமூக மக்கள் திமுக பக்கம் அதிக அளவில் வருவாங்க. இருக்கிற பிரதிநிதித்துவத்தை குறைக்கிறது என்ன நியாயம்னு முதலமைச்சர் கிட்ட முறையிட திட்டமிட்டுருக்காங்களாம்.
இதையும் படிங்க: ஃப்யூஸை பிடிங்கியும் பவர் காட்டும் செந்தில் பாலாஜி டீம்... கோவையில் கெத்து காட்டும் போஸ்டர்ஸ்..!
அமைச்சர் இல்லன்னா என்ன மொத்த மண்டலமும் சேர்ந்த ஒரு முக்கிய பொறுப்பு முன்னாள் மாண்புமிகு ஒருத்தருக்கு போக இருக்காம். கோவை மாவட்டத்தில திமுகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலையில கோவை மாவட்டத்தோட பொறுப்பு அமைச்சராக்ச் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்ததுறை வழக்குல சிறைக்கு போன பிறகு, ஈரோடு முத்துசாமியை பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை.
ஆனால் அவரால செந்தில் பாலாஜி அளவுக்கு மாவட்ட நிர்வாகிகளையும் அதிகாரிகளையும் வேலை வாங்க முடியலன்னு திமுகவினரே புகார் வாசிக்க ஆரம்பிச்சாங்க. இதனால் பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி மறுபடியும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டாரு. ஆனா இப்ப மறுபடியும் அமைச்சரவையிலிருந்து வழக்குக்காக செந்தில் பாலாஜி விலகிக்கிட்ட நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் யாருங்கிற கேள்வி எழுந்திருக்கு. தேர்தல் நெருங்குற நிலையில செந்தில் பாலாஜியை விட்டால் மேற்கு மண்டலத்தை யாராலும் சமாளிக்க முடியாது. அதனால அவருக்கு மண்டல அளவில ஒரு பொறுப்பு கொடுக்க திட்டமிட்டுருக்காம் திமுக தலைமை.
இதையும் படிங்க: மங்குனி ஆட்சி நடத்திய இபிஎஸ் திமுக அமைச்சரவை மாற்றத்தை விமர்சிப்பதா.? ஆர்.எஸ். பாரதி பொளேர்.!