×
 

“ஹலோ ப்ரோ... விஜய் சார் கேக்குதா? - தவெக தலைவரை தாறுமாறாக சாடிய திமுக மாஜி அமைச்சர்...!

ஹலோ ப்ரோ விஜய் சார் கேக்குதா என்று தமிழ்நாடு மக்கள் கத்துகிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரை திமுக பக்கம் அணுக கூட விடமாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அவரை தவெகவும் புறக்கணித்து விட்டது அதிமுகவும் புறக்கணித்துவிட்டது. தற்போது நடுரோட்டில் அனாதையாக விஜயபாஸ்கர் நிற்கிறார் அதுதான் அவரது இன்றைய கதி புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி கருத்து

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக  சார்பாக வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் தங்க மோதிரத்தை திமுக முன்னாள் அமைச்சரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.ரகுபதி அணிவித்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ரகுபதி கூறுகையில்: தமிழ்நாட்டில் தான் பேசுறோம் என்பதை மறந்துவிட்டு டெல்லியில் தமிழ்நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை என்னென்ன வைத்தோம் என்பதை மறந்துவிட்டு மேகதாது அணைக்கட்டு விவசாயிகளுக்காக பேசுவதை மறந்து விட்டு விவசாயிகள் கடன் தள்ளுபடியில் அதிர்ச்சி ஏற்பட்டு ஆட்சி அமைத்து பதினைந்து நாட்களில் வீதியில் இறங்கி விவசாயிகள் போராடுவதை மறந்துவிட்டு 

இதையும் படிங்க: விஜயை சீண்டிப்பாக்குறது கூட்டணிக்கு நல்லத்தில்லை! மேகதாது விவகாரம்! சிவக்குமார் அடக்கி வைங்க! காங்.,க்கு தவெக கோரிக்கை!

ஹலோ பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் ப்ரோ ப்ரோ என்று கத்திவிட்டு சென்று இருக்கின்ற காட்டுக் கூச்சலை தான் நாங்கள் திருச்சியில் முதலமைச்சர் பேசுவதை பார்க்கின்றோம். இது சினிமா சூட்டிங் தான் அவர் எட்டு மணியிலிருந்து 5 மணி வரை சினிமா கால் சீட் கொடுத்துள்ளார். சினிமாவில் காலையில் எட்டு மணிக்கு போனால் 5 மணிக்கு வந்து விட வேண்டும். அதைத்தான் 8 டு 5 கால்ஷீட் என்பார்கள். அதைத்தான் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். ஒரு படத்தை விரைவாக முக்கியமாக முடிக்க வேண்டும் என்றால் 8 டு 8 கால் சீட் உண்டு. அந்த 8 டு 8 கால் சீட்டை திருச்சி போன்ற வெளியூர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வரும்பொழுது கடைபிடிக்கிறார். 

இன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பணி சினிமாவில் கால்ஷீட் கொடுப்பது போல 8 டு 5 8 டு 8 கால்சீட் முறையில் தான் நடந்து வருகிறது. வேறு எந்த முன்னேற்றமும் தமிழ்நாட்டில் கிடையாது. கேட்டால் 15 தினங்கள்தான் ஆட்சிக்கு வந்து ஆகுது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவார். 

ஆனால் இந்த 15 தினங்களில் கொலை கொள்ளை வழிப்பறி சிறுமைகளுடைய பலாத்காரம் பெண்களுடைய பலாத்காரம் இவை எல்லாம் என்னில் அடங்காதவையாக நடந்துள்ளது. காவல்துறையை நியாயமாக நடத்துகிறேன் என்று கூறும் முதலமைச்சர் ஆட்சியில் இத்தனை வன்கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிறது. 

ஹலோ ப்ரோ விஜய் சார் கேக்குதா என்று தமிழ்நாடு மக்கள் கத்துகிறார்கள். சும்மா அவர்கள் பேசினால் கேட்காது ஹலோ விஜய் சார் கேக்குதா கேக்குதா தமிழ்நாட்டின் அவள குரல் கேட்குதா என்று 15 தினங்களிலேயே கேட்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. 

இதைவிட கொடுமையாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார் அவர். விவசாயத்தை விட கடினமானது விளையாட்டு என்று கூறுகிறார் அவர் சாப்பிடுவதெல்லாம் கிடையாது போல விண்வெளிக்கு செல்பவர்கள் மாத்திரை உண்டு  45 நாட்கள் இருப்பதைப் போல அவர் மாத்திரை தான் உண்ணுவார் போல, விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாததை போன்று அமைந்துள்ளது. அவர்கள் வளர்ந்த சூழ்நிலை அவ்வாறு உள்ளது. அவர்களுக்கு விவசாயிகளின் நிலை தெரியாது. 

தற்போது எங்கு பார்த்தாலும் லாட்டரி சீட்டுகள் ஓடுகிறது. எந்த கடையில் கேட்டாலும் ஒரு நம்பர் நான்கு நம்பர் லாட்டரி எல்லாம் இருக்கிறது. காவல்துறை கை கட்டப்பட்டுள்ளது. 100 ரூபாய் 125 ரூபாய்க்கு மது குடித்துவிட்டு மிச்சத்தை தான் கொண்டு சென்று குடும்பத்திற்கு கொடுக்கிறார்கள் ஏழை குடும்பம் பாழாகிறது என்று கடந்த ஆட்சியில் கூறினார்கள் தற்பொழுது முழுமையாக 500 ரூபாயும் ஏழை குடும்பத்தினர் செலவு செய்யக்கூடிய நிலை இருந்து வருகிறது. லாட்டரி சீட்டுகளை வாங்கி சுரண்டி சுரண்டி பார்க்கக்கூடிய நிலை இருந்து வருகிறது. 

மக்களுடைய கண்ணீரை துடைக்காத ஆட்சி தான் ஹலோ சிஎம் சார் உங்கள் ஆட்சியில் தான் லாட்டரி சீட்டு மோகம் அதிகரித்துள்ளது. லாட்டரி சீட்டுகளை ஊக்கப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் முடிவெடுப்பார்கள் நீங்கள் சொல்வதைப்போல நாங்கள் சொல்லக்கூடாது என்று கூறுவீர்கள் அதேபோல நாங்கள் உங்களை சபிக்க கூடாது. மக்கள் பார்த்துக் கொள்வார்கள். 

நாங்கள் போதை கலாச்சாரத்தை மூளை முடுக்கலாம் விட்டுச் செல்லவில்லை நாங்கள் கட்டுப்படுத்தி தான் வைத்திருந்தோம். இப்ப வருவதை இவர்கள் தடுக்க வேண்டும் இப்போது எங்கே வருகிறது. நாங்கள் விட்டுச் சென்றதையா தற்போது விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வரும் போதை பொருட்களை தடுக்கக்கூடிய அரசுதான் ப்ரோ விஜய்யின் அரசு. சிஎம் சார் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிவிட்டீர்கள். இன்னும் கால்ஷீட் மோகத்தில் தான் இருக்கிறீர்கள். எப்படி நடிப்பது என்று நடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஆக நடிப்பை தவிர வேறு ஒன்றையும் பார்க்கவில்லை. சிஎம் சார் என்றால் திரும்பி பார்ப்பார். ஹலோ என்றால் திரும்பிப் பார்ப்பார். குட்டீஸ் அம்மா கிட்ட சொல்லுங்க அப்பாட்ட சொல்லுங்க மாமா கிட்ட சொல்லுங்க என்று கூறி  மாமா சீர் தங்கை சீர் எல்லாம் வரும் என்று கூறினார். எந்த சீரும் வரவில்லை சீர் கெட்டு தான் போய் உள்ளது. 

திருச்சியில் காட்டு கூச்சல் தான் போட்டார் என்ன விமர்சனம் செய்தார். திமுக ஆக்கும் சக்தி தமிழ்நாட்டை ஆக்கி இருக்கின்ற சக்தி தான் திமுக. அளிக்கும் சக்திதான் தவெக சக்தி. 1967க்கு பிறகு திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளோம் அந்த சக்தி திமுக. அழிக்கும் சக்தி விஜய் சக்தி. 

திமுகவை ஒரசக்தி பார சக்தி என்றெல்லாம் கூறுகிறார் அவருக்கு பராசக்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்காததால் தற்பொழுது இப்படி தீய சக்தி ஓரசக்தி‌ எல்லா சக்தி என்றெல்லாம் கூறி வருகிறார். எம்பி சீட்டை தாரை வார்த்தது போல தவெக இன்னும் நிறைய தாரை வார்ப்பார்கள்.பாஜகவை விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்று விஜய்க்கு தெரியும் அதனால் அவர் விமர்சனம் செய்ய மாட்டார். 

மின்வாரியத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போயிருப்பதாக கூறுகிறார்கள் நாங்கள் கையோடு எடுத்துக் கொண்டு போகவில்லை அதிகாரிகள் தான் பொறுப்பு மின்வாரியத்தில் ஹார்ட் டிஸ்க் ணாமல் போயிருந்தால் அவர்கள் கண்டுபிடித்து தருவார்கள்.

இன்று சுத்தமாக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதுதான் இந்த ஆட்சியின் உடைய 15 20 நாள் சாதனை என்பதை மன வேதனையுடன் கூறுகிறேன். ப்ரோ விஜய் சிஎம் சார் இனிமேவாவது இதில் கவனம் செலுத்துங்கள். காவல்துறையை அதிகாரியுங்கள் நாங்கள் திறமையாக தான் ஆட்சி செய்தோம். நீங்கள் அவ்வாறு செய்யவில்லை சிஎம் சார் நாங்கள் இதை கோரிக்கையாக தான் வைக்கின்றோம் இனிமையாவது தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் உங்களை பார்க்காமலே வாக்களித்து இருக்கிறார்கள் அந்த காட்சியும் நாங்கள் பார்த்திருக்கிறோம். உழைத்தவனுக்கு மரியாதை கிடையாது தேர்தலில் எப்படி எல்லாம் வெற்றி அடைய வேண்டும் என்று உழைத்தவனுக்கு மரியாதை இல்லை திடீரென்று வந்துவிடலாம் என்ற புதிய கண்டுபிடிப்பை இந்தியா அரசியலுக்கு தந்துள்ளீர்கள் அந்த புதிய கண்டுபிடிப்பு இனி தொடராமல் இருந்தால் சரி அப்படி தொடர்ந்தால் நாடு குட்டி சோராக போய்விடும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரை திமுக பக்கம் அணுக கூட விடமாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அவரை தவெகவும் புறக்கணித்து விட்டது அதிமுகவும் புறக்கணித்துவிட்டது. தற்போது நடுரோட்டில் அனாதையாக விஜயபாஸ்கர் நிற்கிறார் அதுதான் அவரது இன்றைய கதி. 

தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினால் அறிக்கை வெளியிடுவார்கள் அந்த அறிக்கை வந்தால் தானே நாம் எதையும் கூற முடியும். என்ன ஆலோசனை செய்தார்கள் என்பதை அவர்களுக்குள்ளேயே ஆலோசனை செய்திருக்கிறார்கள். ப்ரோ விஜய் சார் சொன்னால்தான் தெரியும். அதிகாரிகள் இந்த முதலமைச்சர் பார்த்து பயந்து வருகின்றனர் ஏதாவது சொன்னால் முதல்வன் படப்பாடியில் அங்கேயே டைப் அடித்து பணியிடை மாற்றத்தை கொடுத்து புதிய வரலாற்றை உருவாக்கி விடுவார் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். 

தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் புதுமையை இன்று தவேக கண்டுபிடித்துள்ளது. அதில் ப்ரோ விஜய் கெட்டிக்காரர் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: டெல்லியில் ஜூன் 8ல் நடைபெறும் I.N.D.I.A கூட்டணி மாநாடு! ஓகே சொன்னார் விஜய்|? தவெக பங்கேற்க வாய்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share