விஜய் வாஷிங் பவுடரை போட்டு வெளுத்தால்... தவெகவுக்கு ஜம்ப் அடித்த விஜயபாஸ்கர்களை விளாசிய ரகுபதி...!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அந்த கட்சியிலே பொறுப்பிலே இருந்தவர்களும், அடுத்த கட்சிக்கு ஓடுவதை, தாவுவதைக் கண்டு, இன்றைக்கு தமிழ்நாடே வியப்படைந்திருக்கின்றது.
விஜய் வாஷிங் பவுடர் போட்டு விஜய் வாஷிங்மெஷினில் துவைத்தால், யார் யார் மீது எல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கின்றதோ, அவர்கள் எல்லாம் புனிதர்களாக, புத்தர்களாக மாறிவிடுவார்கள், சொல்ல முடியாது, அவங்களுக்கு கோயில் கட்டிக்கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க. அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது. தவெகவில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்ததற்கு புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி விமர்சனம்.
குளம் வற்றிப்போனால், பறவைகள் அடுத்த குளத்தைத் தேடிப் போவது வழக்கம். ஆனால் குளத்தையே வற்றிச் செய்துவிட்டு, இன்றைக்கு பறவைகள் அடுத்த குளத்தைத் தேடிப் போகின்ற அபூர்வத்தை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அந்த கட்சியிலே பொறுப்பிலே இருந்தவர்களும், அடுத்த கட்சிக்கு ஓடுவதை, தாவுவதைக் கண்டு, இன்றைக்கு தமிழ்நாடே வியப்படைந்திருக்கின்றது. ஏன், இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் பொறுத்திருக்க முடியாதா? ஆனால் இன்றைக்கு, குதிரை பேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு, இன்றைக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.-வும் தவெகவுக்கு தாவுவதுதான் என்பதை, நாங்கள் அடித்துச் சொல்கிறோம்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காங்க. அதைக்கூட வாஷிங் மெஷின் சொல்லியிருக்காங்க. அதுல இன்னொன்ன கூட சொல்லிக்கலாம். வாஷிங் பவுடர் நிர்மான்னு ஒரு பாட்டு வரும். அதுல அந்த பவுடரை போட்டவுடனே கறை போயிடும்னு சொல்லுவாங்க. அது ஒரு கறைக்கு பொருந்தும். அதுபோல ஒரு கறை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய்.
இதையும் படிங்க: "தமிழக பட்ஜெட்"..! தவெக அரசு மீது எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் ஆலோசனை..!
அதேபோல சி.விஜயபாஸ்கருக்கு இப்ப நாலு கேஸ் நிலுவையில் இருக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மூன்று கேஸ் நிலுவையில் இருக்கு, வேலுமணி போன்றவர்கள் வந்தா அவங்க மேலயும் கேஸ் நிலுவையில் இருக்கு. அதையெல்லாம் பவுடர் போட்டு இது பண்ண முடியாது, துவைக்க முடியாதுங்கிறதுனால மெஷின்ல போட்டுத்தான் துவைக்கணும். அந்த மெஷினுக்கு பேரும் விஜய்ன்னு தான் வச்சிருக்காங்க, வாஷிங் மெஷின் விஜய். எனவே, விஜய் வாஷிங் மெஷினில் வாஷிங் பவுடர் விஜயை போட்டு துவைத்தால், யார் யார் மீது எல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கின்றதோ, அவர்கள் எல்லாம் புனிதர்களாக, புத்தர்களாக மாறிவிடுவார்கள். சொல்ல முடியாது, அவங்களுக்கு கோயில் கட்டிக்கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க. எனவே, அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது.
நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எங்களுடைய தலைவர் குதிரை பேர அரசியலிலே வரவேண்டும் என்று நினைத்திருந்தால் 2017-லேயே வந்திருக்க முடியும். அன்றைக்கு எங்களிடத்திலே 109 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். ஆனால், குதிரை பேரம் கூடாது, நான் கொல்லைப் புற வழியாக வர விரும்பவில்லை, மக்களை சந்தித்துதான் நான் வருவேன் என்று சொன்ன தலைவர் எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின். எனவே, கொல்லைப்புற அரசியல் என்பது அவருக்கு பிடிக்காது, நாங்க குதிரை பேரம் என்பது எங்களுக்கு பிடிக்காது. குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று இருந்தால் அன்றைக்கே வந்திருக்க முடியும். எனவே, குதிரை பேரத்திற்கு எதிரானதுதான் திமுக. ஜனநாயகத்தைத்தான் நாங்கள் நம்புகிறோமே தவிர, பணநாயகத்தை நம்பவில்லை.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக தீவிரம்! மத்திய அரசே விசாரிக்க ரகுபதி கோரிக்கை!