ஐந்து தொகுதி இடைத்தேர்தல்! அன்பில் மகேஷ் கைதால் திமுகவுக்கு பின்னடைவு! தவெக கையில் அஸ்திரம்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது. அடுத்த ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெறத் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க ஸ்டாலின் திட்டமிட்டார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து திமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24 ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொகுதி வாரியாகத் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது திருச்சி கிழக்குத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, விராலிமலைத் தொகுதிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன், கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி முறைகேடு! அன்பில் மகேஷ் வழக்கில் பெருங்குடியில் அதிரடி சோதனை! ஷண்முக பிரியா வீட்டில் ரெய்டு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது. அடுத்த ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெறத் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க ஸ்டாலின் திட்டமிட்டார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதுடன் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சித் தலைமைக்கு வேட்பாளர்களையும் பரிந்துரை செய்துள்ளனர்.
திருச்சி கிழக்குத் தொகுதிக்கு அன்பில் மகேஷ், கரூர் தொகுதிக்கு அசோக்குமார், விராலிமலைத் தொகுதிக்கு எம்.எம். அப்துல்லா, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ரவீந்திரநாத், பெருந்துறைத் தொகுதிக்கு முத்துசாமி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நடவடிக்கை எடுத்து அக்கட்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: பீதியில் மக்கள்..! தவெக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு விடிவே இல்ல..! ஸ்டாலின் விளாசல்.!