"குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
குதிரை பேரன் விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா. அவர், தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார். “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
கரூர் துயரச் சம்பவத்தில் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து திமுகவினர் புகார் மனு கொடுக்க உள்ளனர். சட்டம் ஒழுங்கு விவகாரம், பாலியல் வன்கொடுமைகள், அரசு வழக்கறிஞர் நியமனம், ஆய்வு என்ற பெயரில் அராஜகம் நடப்பதாக திமுக சுட்டிக்காட்டி உள்ளது. எந்த நிலையில் இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ஆளுநரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் குறைத்து திமுக முறையிடுகிறது. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையின் மூலம் மிரட்டியது தொடர்பாகவும் புகார் அளிக்க திமுக முடிவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: அவதூறு வழக்கில் 6 மணி நேரம் விசாரணையா.? பிஜேபியின் அதே யுக்தி... திமுக கடும் கண்டனம்..!
கரூர் துயரச் சம்பவத்தில் காவல்துறையே கொலை செய்தது என வரம்பு மீறி அமைச்சர்கள் பேசுவதாகவும் திமுக புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றிக்கழக அரசு மீது பாஜக நிர்வாகிகள் புகார் மனு கொடுத்த நிலையில் திமுகவும் என்று ஆளுநரை சந்திக்கிறது. குதிரை பெரும் நடத்தி ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சியை அகற்றுமாறு ஆளுநரை சந்தித்த முறையிட திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!