H. ராஜா அதிரடி கைது..! இதுதான் காரணம்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி..!
சட்டத்தை கையில் எடுத்ததால் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீது, முருகன் கோயிலின் தலவிருட்சமாக விளங்கும் கல்லத்தி மரம் ஒரு சாதாரண மரம் அல்ல. இத்தலத்தின் ஆன்மீக இதயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த மரம் பாறை இடுக்குகளில் வளரும் தன்மை கொண்டது இந்த மரம், பால், பட்டை, பழம் ஆகியவற்றால் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலின் வரலாற்றோடு இணைந்திருப்பதால் இம்மரத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. ஆறுபடை வீடுகளில் முதலாவதாக விளங்கும் இத்தலத்தில், முருகப்பெருமான் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
சமீபகாலமாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துர்கா மற்றும் கோவில் இரண்டுமே மலை மீது இருப்பதால் கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த எச். ராஜா கல்லத்தி மரம் தர்காவுக்கு சொந்தமானதா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி மலைப்பாதையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்தார்.
போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே, ஹெச். ராஜா அதிரடியாக கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் மலையேற சென்ற எச்.ராஜா தடுத்து நிறுத்தப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது, இனத்தால், மதத்தால், மொழியால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் என்று குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததும்..." - அமைச்சர் சேகர்பாபுவை நேரடியாக சீண்டிய எச்.ராஜா...!
இந்த ஆட்சி சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சி என்றும் யாரெல்லாம் சட்டத்தை கையில் எடுக்கிறார்களோ அவர்கள் மீது முதலமைச்சரின் இரும்பு கரங்கள் பாயும் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் ஹெச். ராஜா சட்டத்தை கையில் எடுத்ததால் கைது செய்யப்பட்டதாகவும், மென்மையான போக்குடன் சமாதானம் பேசுபவர்களை கோழைகள் என நினைக்க வேண்டாம். என எச். ராஜாவுக்கு அறிவுறுத்தல் கொடுப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது..!! அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்..!!