தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!
புதிய அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு இப்போது தானே பொறுப்பேற்று இருக்கிறார்கள்
பிரதமர் போன்ற பொறுப்பு மிக்க இடங்களில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு அறிவுரை மட்டும் தான் கொடுக்கிறார்கள் என நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக மாநில துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்றார்.
பின்னர் கனிமொழி எம்.பி., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, கேஸ் சிலிண்டர் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அதன் விலையும் ஏறிக் கொண்டிருக்கிறது. சாதாரண சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!
உணவகங்கள் நடத்தக்கூடியவர்கள் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறார்கள். மிகப்பெரிய சிக்கல்களும் ஏற்பட்டிருக்கிறது. பெரிய இழப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையும் ஏறிக் கொண்டிருக்கிறது எல்லா பொருட்களின் விலையும் அத்தியாவசிய பொருட்களை விளையும் உயர்வதற்கான நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பிரதமர் போன்ற பொறுப்பு மிக்க இடங்களில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு அறிவுரை மட்டும் தான் கொடுக்கிறார்கள். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எந்தவிதமான நம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங்களை தெரிவிக்காத சூழ்நிலையை பார்க்க முடிகிறது.
மக்களை பதற்றத்தில் ஆக்கக்கூடிய மக்களுக்கு கட்டுப்பாட்டுகளை விதிக்க கூடியவர்கள் விஷயங்களை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அவர்கள் என்ன நடவடிக்கை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதை கூறவில்லை. அச்சத்தையும் கேள்விக்குறியையும் உருவாக்கக்கூடிய சூழ்நிலையை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள்.
புதிய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, இப்போது தானே பொறுப்பேற்று இருக்கிறார்கள் எனக்கூறி விமர்சனத்தை தவிர்த்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!