×
 

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பதிலடி கொடுத்த கனிமொழி.. எடப்பாடி பழனிசாமிக்கு நெத்தியடி..!

எடப்பாடி பழனிசாமி அதிமுகவா? பாஜகவா? என கேள்வி கேட்கும் அளவிற்கு மாறி மாறி பேசி வருவதாக கனிமொழி எம்.பி. கடும் விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கேம்லாபாத் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், திமுகவினரின் கோரிக்கை என்னவென்று தெரியும். ஆனால்,முதல்வருக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் கூட்டணி கட்சியை வெற்றி இப்ப செய்ய வேண்டும் என்ற உறுதியை  இங்கே எடுத்துக்கொள்ளவேண்டும். ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி ஒவ்வொரு வீடுகளுக்காக சென்று நமது திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். விடியல் பயணம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம்,  உள்ளிட்ட திட்டங்களை  நினைவு படுத்த வேண்டும்.  மாறிவரும் தேர்தல் சூழலில் டிஜிட்டல் முகவர்கள் முக்கியமானவர்களாக மாறுவார்கள்.

புதிய ஆப் பை திமுக மூத்த முன்னோடிகளும் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளோம்.  இதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நாம் தயாராக உள்ளோம். தமிழக மக்கள் ஒன்றிய அரசால் படும் கஷ்டங்கள், தமிழக உரிமைகளை ஒன்றிய அரசு எப்படி தட்டிப் பறிக்கிறது, இதனை தமிழக முதல்வர் சரி செய்து தமிழகத்தை எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்கவில்லை எனில் நமக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 2000 கோடி நிதியை தர மறுக்கிறார்கள். இந்த சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கலைஞரிடம் கற்ற பாடத்தை செயல்படுத்தி நமது முதல்வர் தமிழகத்தை வழிநடத்தி செல்கிறார்.

இந்த அனுபவத்தால் தான் என்ன அழுத்தம் வந்தாலும் தமிழகத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல அவரால் முடிகிறது என்பதை மக்களிடம் பதிவு செய்ய வேண்டும்.  தமிழகத்தை யாரால் வழிநடத்த முடியும் யார் துரோகம் செய்கிறார்கள் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இத்தனை நாள் பிஜேபியோடு கூட்டணி இல்லை என சொல்லிய எடப்பாடி பழனிசாமி தற்போது கூட்டணியில் சேர்ந்த பிறகு அவர் அதிமுகவில் இருக்கிறாரா பிஜேபியில் இருக்கிறாரா எனறு கேள்வி கேட்கும் அளவிற்கு அவர் கோவிலை பற்றி பேசுகிறார். திருச்செந்தூரில் எந்த பிரச்சனையும் இல்லாத அளவிற்கு குடமுழுக்கு நடத்தி முடித்திருக்கும் பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. எல்லாரையும் பாதுகாக்கும் அரசு ஆட்சி இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகளை மட்டுமின்றி மக்களையும் ஓரணியில் இணைக்கக் கூடிய வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: "கவாச்" குறைபாடு... காதுலையே வாங்கல..! மத்திய அரசை சாடிய கனிமொழி..!

சந்திரமுகி படத்தில் கங்கா சந்திரமுகியாக மாறியதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபுவிடம் சொல்வது போல், பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் எடப்பாடி பழனிசாமி பிஜேபியாகவே மாறிவிட்டார் என கனிமொழி விமர்சித்தது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது. 

 

இதையும் படிங்க: “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share