சென்னையில் பயங்கரம்... திமுக நிர்வாகிக்கு ஓட, ஓட அரிவாள் வெட்டு... பகீர் காட்சிகள் வெளியீடு...!
சென்னை ஆர்.கே.நகரில் திமுக துணை வட்ட செயலாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை ஆர்.கே.நகர் 38வது பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திமுக துணை வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருக்கும் நபரிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், பின்னால் இருந்து வந்த இருவர் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த ராஜாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் கத்தியால் தாக்கிய நபர்களை பிடிக்க முயன்ற போதும் அவர்கள் தப்பியுள்ளனர். இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜாவை, மக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ராஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜாவிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் செக்!! தவெக கதையை முடிச்சாகணும் இடைத்தேர்தலில் தனித்து போட்டி?!
வேறு ஒரு பெண்ணுடன் ராஜாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் ராஜாவை தாக்கியிருக்கக்கூடும் என்ற கண்ணோட்டத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!