தைரியம் இருந்தால் விஜய் இதை செஞ்சியிருக்கனும்... போட்டுத் தாக்கிய துரைமுருகன் ...!
தன் நெஞ்சே தன்னை சுடுகின்ற காரணத்தினால் விஜய் நேரில் செல்லாமல் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசியுள்ளார் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள மோர்தனா அணை கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அணையை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் மோர்தனா அணையில் மலர் தூவினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன். குடியாத்தம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்ததாவது: விரைவில் மோர்தன அணை சுற்றுலா தளமாக மாற்றப்படும். மேலும் பொதுமக்கள் மோர் தானா அணியை பார்வையிட மூன்று பேருந்துகள் இயக்கப்படும். அது மட்டுமில்லாமல் புறக்காவல் நிலையம் மோர் தானா அணை அருகே அருகே அமைக்கப்படும்.
இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது! தேவைப்பட்டால் விஜயும் "ARREST"... அமைச்சர் துரைமுருகன் உறுதி...!
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பலியான குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காமல் வீடியோ கால் மூலம் விஜய் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு, தைரியமாக அவர்களுடைய தோழர்களோடு நேரில் சென்று பேசியிருக்க வேண்டும். தன்நெஞ்சே தன்னை சுடுகிறது என்ற காரணத்தினால் அவர் வெளியே வருவதற்காக தயங்குகிறார். அதனால் வீடியோ காலில் பேசியிருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING கரூர் செல்கிறார் விஜய்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பறந்த முக்கிய கடிதம்...!