“வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் அறிக்கை ஒரு வெத்து வேட்டு தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் முன்பு எஸ்டிபிஐ கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமிழக சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் பேசுகையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எத்தனையோ அடக்குமுறை திட்டங்கள் கொடுத்தாலும் நான் திராவிட மாடல் ஆட்சி தான் நடத்தி வருவேன் நான் ஒரு திராவிடன் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நிச்சயமாக விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும், தேவை உள்ளவர்களுக்கும் நான் இப்படித்தான் செயல்படுவேன் என துணிந்து சொன்னார். இந்தியாவில் வேறு யாரும் இவ்வாறு துணிந்து சொல்லவில்லை
விரைவில் தேர்தலை சந்திக்க உள்ளோம் நம்மிடம் பிரிவினை செய்து நமக்கான ஓட்டுகளை மடை மாற்றுவது, சிதறடிப்பது இதுதான் பாஜகவின் திட்டம், அதனால் தான் நிறைய பேரை (விஜயை மறைமுகமாக தாக்கினார்) இறக்கிவிட்டு இருக்கிறார்கள் நம்மை திட்டுபவர்கள் (விஜய்) பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை என்றார் பாஜகவை கண்டால் அது அவர்களுக்கு பயம், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது வாக்கு வங்கி சிதறடிக்கப்படாமல் அத்தனை பேரும் பணி செய்திட வேண்டும் நிச்சயமாக நம்முடைய எதிர்காலத்திற்கு நம்முடைய பாதுகாப்பிற்கு நம்முடைய வாழ்வாதாரத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் இருக்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் அனைவரும் இணைந்து செயல்பட்டு மக்களை நல்வழிப் படுத்துவோம். இப்பொழுது வளர்க்கடைந்த பல தமிழ்நாட்டின் மென்பொருளும் வளர்ச்சி பதக்கிக் கொண்டு செல்வோம் என்று கூறிக்கொண்டு இந்த நோன்பு திறக்கும் விழாவில் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: இனி ஒவ்வொரு சம்மருக்கும் ரூ.2 ஆயிரம்...! அமைச்சரின் அறிவிப்பால் பெண்கள் செம்ம குஷி..!!
பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நம்முடைய மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் இருக்கக்கூடிய நமது முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் ஆன திட்டத்தை நிறைவேற்றி செய்து கொண்டு வருகிறோம்.
மக்கள் வந்து ஏற்கனவே சொன்னதை செய்கின்ற சொல்லாததையும் செய்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்புவார்கள் இதெல்லாம் சொல்லப்போனால் வெத்து வேட்டு தான் என்று சொல்ல வேண்டும் ஒரே உதாரணம் சொல்கிறேன் அவருடைய பெண்கள் குழந்தைகள் முதியோர்களுக்கான தனித்துறை என சொல்கிறார். ஏற்கனவே பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் திருநங்கைகளுக்கு தனித்துறை தான் சமூக நலத்துறை இது தெரியாமல் அவர் கத்துகிட்டு வரட்டும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை அமைச்சர் கீதா ஜீவன் சாடினார்.
இதையும் படிங்க: “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!