வாயைக் கொடுத்து வாண்டடாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி... வச்சி செய்த திமுக அமைச்சர்..!
அதிமுகவின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டு உள்ளது. பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளதாக அவர்களை ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள் என திருப்பூரில் செய்தி துறை அமைச்சர் தெரிவித்தார்.
திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடுஊரக நகர் புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் மனிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட திரளான மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டனர் இதில் மகளிர் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில் 689 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 கோடி கடன் உதவி தொகையினை செய்தித் துறை அமைச்சர் மற்றும் மனிதம் வள மேம்பாட்டு துறை அமைச்சர் மகளிர் குழுக்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கும் திட்டத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார் தற்பொழுது அந்த திட்டம் படிப்படியாக வளர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியுள்ளது.
இந்த சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். இதன் மூலம் அந்நிய செலாவணியும் ஈட்டப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் சொந்த காலில் முன்னேறுவதற்கு இந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உதவியாக உள்ளது. இந்த குழுக்களுக்கு கடனுதவிகளை தமிழக அரசு செய்து அவர்களுடன் எப்போதும் ஒன்றாக நிற்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது குறித்த கேள்விக்கு, அதிமுகவின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: கூட்டணி வெக்குற மாநில கட்சிகளை சிதைப்பது தான் பாஜக வேலை.. விளாசிய செல்வப்பெருந்தகை!
பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள் என்றார். தொடர்ந்து சினிமாவில் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக விதிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இதற்கு உரிய தீர்வு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செல்லாக்காசு! யாரை சொல்றாரு இவரு? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை