×
 

திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், திமுக அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, திமுக அரசு மீது அடுக்கடுக்கானப் புகார்களை முன்வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது, 

திமுக அரசு தனது சொந்தக் கட்சியினரையே நம்பாமல், அரசு அதிகாரிகளை வீடுகளுக்கு அனுப்பித் திட்டமிட்டுக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? இலவசப் பேருந்தில் செல்கிறீர்களா? எனக் கேட்டு திமுகவுக்குச் சாதகமானச் சூழலை உருவாக்க முயல்கின்றனர்.

இதையும் படிங்க: ஆயிரம் மோடி வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் தான்! அமைச்சர் கோவி. செழியன் அதிரடிப் பேச்சு!

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில், வெளியூர்களில் வசிக்கும் சுமார் பத்தாயிரம் பேரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவர்களைத் தொகுதியின் வாக்காளர்களாகத் திமுகவினர் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளனர்.

திமுகவின் இந்தச் சதியை முறியடிக்க அதிமுகவினர் ஒவ்வொரு வீடாகச் சென்று, அங்கு உண்மையில் வசிப்பவர்கள் யார் என்பது குறித்து முழுமையானத் தரவுகளைச் சேகரிக்க வேண்டும். கூட்டத்தின் இறுதியில், திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்களுக்குப் புரியவைக்கும் வகையில் ஒரு புதுமையான முயற்சியைத் தங்கமணி மேற்கொண்டார்:

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் தற்போதைய விலை ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு விரிவானப் பட்டியலை வெளியிட்டார்.

இந்த விலைவாசி மாற்றங்களைத் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், ‘விலைவாசிப் பட்டியல் தானியங்கி கருவிகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் திமுக காலத்து விலைவாசி உயர்வைக் கிராமம் கிராமமாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share