×
 

களமிறங்கிய ஸ்டாலின்.. திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 4வது நாளாக நேர்காணல்..!

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் 4வது நாளாக நேர்காணல் நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது. கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு அளித்தவர்களைத் தேர்வு செய்யும் முக்கியமான நடைமுறையாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரடியாக ஆலோசனை மற்றும் நேர்காணல் நடத்தி வருகிறார்.

இதன் 4வது நாள் இன்று நடைபெறுகிறது.இந்த ஆலோசனை முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. திமுகவின் வேட்பாளர் தேர்வு குழு மற்றும் மூத்த தலைவர்களுடன் இணைந்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, கட்சியின் உள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதோடு, வலுவான மற்றும் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியாகக் கருதப்படுகிறது.

அவர்களின் அரசியல் பின்னணி, தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சிப் பணிகளில் ஈடுபாடு, மக்களுடனான தொடர்பு ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன. மேலும் பல தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர் விருப்பக்காரர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக உரையாடி, ஆலோசனை வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க: WAIT&SEE..! வில்லிவாக்கத்தில் செஞ்சி விட்ருவோம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு சேகர்பாபு எச்சரிக்கை..!!

நான்காவது நாளாக இன்று முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர் நேர்காணலும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக களத்தில் இறங்கி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். 

இதையும் படிங்க: நான் தான் சொன்னேன்ல.! இபிஎஸ் டெல்லி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share