ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர்.
முன்னாள் முலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் எட்டாவது நினைவு நாளை ஒட்டி, திமுக சார்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தற்போது அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்றது.
குறிப்பாக, அவரது எட்டாவது நினைவு நாளை ஒட்டி, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலையிலிருந்து இந்தப் பேரணி புறப்பட்டு, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை சென்று, அங்கு திமுக சார்பில் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தப் பேரணி தொடங்குவதற்கு முன்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள், ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி திமுகவினர் பேரணியாக புறப்பட்டனர்.
இதையும் படிங்க: மாற்றம் இல்லை... வெறும் ஏமாற்றம் மட்டுமே! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
குறிப்பாக, இந்தப் பேரணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கலந்து கொண்டு, வீர வணக்கம் செலுத்தியவாறு பேரணியாக நடந்து சென்றனர்.
குறிப்பாக, அவர்கள் செல்லும் வழியெங்கும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் குறித்து பதாகைகள் மற்றும் பேனர்கள் வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘நான் முதல் திட்டம்’, அதேபோன்று கலைஞர் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம், ‘கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் நிற்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
குறிப்பாக, இந்தப் பகுதிகள் முழுவதும் திமுக தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து, இந்த நினைவு நாளை ஒட்டி தற்போது பேரணியாகச் சென்றனர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் எட்டாவது நினைவு நாளை ஒட்டி, திமுக சார்பில் இந்தப் பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், எட்டாவது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து இந்தப் பேரணி தொடங்கி, தற்போது காமராஜர் சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கிச் சென்றனர்.
இந்தப் பேரணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள நினைவிடத்தை அடைந்தது. அங்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதேபோன்று திமுகவின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் அஞ்சலி செலுத்த செலுத்தினர்.
இதையும் படிங்க: "எவ்ளோ நாள் தான் சேகர்பாபுவே"..? உளறிக் கொட்டிய திமுக MLA..! மைக்கை பார்த்ததும் செம்ம ஷாக்..!!