“ஆடு நனைகிறதே என ஓநாய் வருத்தப்பட வேண்டாம்...” - நிர்மல் குமாரை வெளுத்து வாங்கிய திமுக மார்க்கண்டேயன்...!
ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆவேசம்.
தூத்துக்குடி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணின் கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும் அமைச்சர் நிர்மல் குமார் ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆவேசம்.
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், பெண்கள் அனேகமானவர் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள் .பெண்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுடைய சுய உரிமையை பாதுகாக்கிற அளவுக்கு இந்த ஆட்சி இருக்க வேண்டும்.
இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து ஏறக்குறைய இதுவரை நேற்று வரைக்கும் அப்டேட் பண்ணி பார்த்ததில் 213 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுப்பது என்பது 99 சதவீதம் நடவடிக்கை எடுக்கவில்லை, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்டவர் நேரடியாக கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதற்குப் பிறகு கோவில்பட்டியிலே பள்ளி மாணவி கொடுத்த வழக்கு இன்றைக்கு செய்தித்தாளில் நமது மாவட்டத்தில் ஒரு வழக்கு எல்லாம் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. திமுகவில் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பெரிய பெண்ணியவாதி பெண்களுடைய சுதந்திரத்தை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லுவதில் அவர் ஒரு எடுத்துக்காட்டு, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருந்தவர். ஐந்தாண்டு காலம் நேரடியாக இடத்தில் போய் நின்று விடுவார்கள்.
இதையும் படிங்க: சிறையில் 30 நிமிட சந்திப்பு! மார்கண்டேயனிடம் உதயநிதி பேசியது என்ன? உளவுத்துறையை ஏவிய முதல்வர் விஜய்!
இன்றைக்கு பாதிக்கப்பட்ட பெண் அலங்கோலமாக கண்ணீர் மல்க நிற்கிறார். மந்திரியும் போகவில்லை யாரும் போகவில்லை எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அமைச்சரவையில் இருக்கிறவர்களையும் கண்டிக்க வேண்டும் .சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியில் இருக்க கூடிய தமிழக வெற்றிக்கழக பிரமுகர்களாள் தான் எங்களுக்கு இந்த பிரச்சனை உயர் மட்ட நிர்வாகிகள் எல்லாம் என்னை வந்து இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் தொலைபேசியில் தொல்லை செய்கிறார்கள் என்பத ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கிறார். அந்தப் பெண் அவருடைய கண்ணீர் திவலைகள் இந்த ஆட்சியை கரைக்கும்
நடிகர் ரஜினிக்கு ஆளுநர் பதவி என்பது குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்றார். திமுகவும் பாஜகவும் கூட்டணி என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளதற்கு ஆடு நனைகிறதேஎன்று ஓநாய் வருத்தப்பட வேண்டியதில்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: "‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு’... மார்க்கண்டேயன் விவகாரத்தில் அமைச்சர் வன்னிஅரசு பதிலடி!