காலையிலேயே ஸ்டாலின் காதுகளை எட்டிய துக்க செய்தி... திமுக எம்.எல்.ஏ. திடீர் மரணம்...!
திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி மாரடைப்பால் காலமான செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு (74) இன்று அதிகாலை திடீரென வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மறைவுக்கு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமி?
கடந்த 2006 -ம் ஆண்டு தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு பொன்னுசாமி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையிலும் பொன்னுசாமிக்கு 2021 ல் சேந்தமங்கலமத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு பறக்கும் ‘வைக்கம் விருது’... இந்தாண்டு யாருக்கு தெரியுமா?
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ச. சந்திரனை 10,493 வாக்குகள் வித்திசாயத்தில் வென்றார்.
இதையும் படிங்க: 'காளி' என்ன கைதியா..?? தலை துண்டிக்கப்பட்ட காளி சிலை போலீஸ் 'கைதி வேனில்' அகற்றம்..!! கொந்தளித்த மக்கள்..!!