×
 

திமுக கள்ளிச்செடி களையெடுக்கப்படும்...! நயினார் திட்டவட்டம்... விவசாயிகள் கண்ணீரை முதல்வர் வேடிக்கை பார்ப்பதாக சாடல்..!

திமுக எனும் கள்ளிச்செடி களையெடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்காச்சோள விவசாயிகளை திமுக அரசு கண்ணீரில் மிதக்க விடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர், நெல்லை, தென்காசி எனத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறை மக்காச் சோளம் அமோகமாக விளைந்துள்ள நிலையில், திமுக அரசின் அலட்சியத்தால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

ஒருபுறம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குவிண்டாலுக்கு 2,400 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்து வரும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசோ மக்காச் சோளத்திற்கான நேரடி கொள்முதல் நிலையங்களைக் கூட அமைக்காமல் இருப்பதாக கூறியுள்ளார். வியாபாரிகளின் சிண்டிகேட்டில் சிக்கித் தவிக்கவிட்டு, விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது என புகார் கூறினார்.

மேலும், மக்காச் சோளத்தின் விலை வீழும் போது, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ரூ.250 வரை இழப்பீடு வழங்கும் வேளையில், திமுக அரசோ மக்காச் சோள உற்பத்தியை ஊக்குவிக்க எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமல் மக்காச் சோள விவசாயிகளின் கண்ணீரை வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: களமாடும் பாஜக... நயினார் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு... தேர்தல் பணிகள் தீவிரம்..!

படைப்புழு தொடங்கி காட்டுப் பன்றி வரை பலவற்றின் தாக்குதலில் அவதியுற்ற போதும் துயர் நீக்க தோள் கொடுக்காததோடு, தனது திறனற்ற நிர்வாகத்தால் மேலும் நிலைகுலையச் செய்யும் திமுக அரசு என்னும் கள்ளிச்செடியை வரும் தேர்தலில் மக்காச் சோள விவசாயிகள் களை எடுப்பார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: வெற்று வாக்குறுதியால் வஞ்சிக்கும் திமுக... ஏமாற்றமே உங்களுக்கு GIFT..! நயினார் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share