ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்... மகப்பேறு விடுப்பு..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!!
ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
ஒப்பந்த செவிலியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்று வகையில் மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது.
இது நீண்டகாலமாக செவிலியர்கள் சங்கங்கள் முன்வைத்து வந்த கோரிக்கையின் வெற்றியாகக் கருதப்படுகிறது.முன்பு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இந்த சலுகை இல்லாமல் இருந்தது. இதனால், கர்ப்பிணியாகும் செவிலியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பலர் விடுப்பு எடுக்க முடியாமல் பணியைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அல்லது ஊதிய இழப்புடன் விடுப்பு எடுத்தனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தப் பாகுபாட்டை எதிர்த்து தொடர் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தன.
இதையும் படிங்க: அடடே..! முதல்வர் தலைமையில் 50 ஆயிரம் பேர் திமுகவில் ஐக்கியம்..!! மாஸ் காட்டும் OPS..!!
இதன் விளைவாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை 2026 பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க ஒப்புதல் அளித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. மகப்பேறு விடுவிப்பு தொடர்பாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடல் 2.0... ஸ்டாலின் STATEMENT ரெடி..!! முதல்வரின் சர்ப்ரைஸ்..!