“இனி உங்களுக்கு கரூர் வேண்டாம்...” - செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை போட்ட புது உத்தரவு... ஷாக்கில் எடப்பாடி...!
எஸ்.பி.வேலுமணி போன்ற அதிமுக முக்கிய தலையை ஜெயிக்கவும் செந்தில் பாலாஜியை கோவைக்கு களமிறக்கலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.
மேற்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 39 தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இருக்கிறார். இதனால் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். செந்தில் பாலாஜியும் திமுக தலைமையின் கனவை நிறைவேற்றும் வகையில் கரூரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.
இப்போது அவருக்கு புது அசைன்மெண்ட் கொடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அதிமுக வசம் உள்ள 10 தொகுதிகளை மீட்கவும், எஸ்.பி.வேலுமணி போன்ற அதிமுக முக்கிய தலையை ஜெயிக்கவும் செந்தில் பாலாஜியை கோவைக்கு களமிறக்கலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.
கோவை அதிமுகவின் கோட்டையாக விளங்குகிறது. இதன் காரணமாக, 2001, 2011 மற்றும் 2021 தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவே தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது. திமுக சார்பில் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சக்கரபாணியும் தனது வேலையை சரியாக செய்யாததால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கரூர் துயர சம்பவம்: செந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!
அதன் பின் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவுக்கு பெரு வெற்றியை பெற்றுக் கொடுத்து தலைமையின் குட்புக்கில் இடம்பிடித்தார் செந்தில்பாலாஜி. அதனால் இப்போது ஒட்டுமொத்த மேற்கு மண்டல வெற்றிக்கான முழுப் பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டது திமுக. தற்போது கோவையை மீண்டும் திமுக வசம் கொண்டு வர எதையும் வேண்டுமானாலும் செய்யுங்கள் என முழு சுதந்திரம் கொடுத்து செந்தில் பாலாஜியை திமுக தலைமை களமிறக்கிவிட்டுள்ளதாம்.
கட்சியில் உள்ளடி வேலை பார்ப்பவர்களை நீக்குவது, கோஷ்டி மோதல்களை களையெடுப்பது என தீவிர வேலைகளை செய்துவருகிறார். இதனிடையே, கரூரை விட்டுவிட்டு முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியை கோவை பக்கம் திருப்ப திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம். “இந்த முறை நீங்கள் கரூருக்குப் பதிலாக ஏன் கோவையில் போட்டியிடக்கூடாது?” என தலைமை சார்பில் செந்தில் பாலாஜிக்கு அன்புக்கட்டளை விடப்பட்டுள்ளதாம். இதனை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தேவையான வியூகங்களை வகுத்து வருகிறாராம்.
கரூர்காரர் வந்து தான் கோவையை ஆள வேண்டுமா? என முதலில் கோவத்தில் இருந்த கொங்கு மக்களும் தற்போது சற்றே சமாதானமாகி செந்தில் பாலாஜியை ஏற்றுக்கொண்டு விட்டார்களாம். கட்டளையிட்டால் எதையும் செய்வோம் என மாநகராட்சி கவுன்சிலர்களில் தொடங்கி, எம்.பி. வரை அத்தனை பேருமே இப்போது செந்தில்பாலாஜியின் கண்ணசைவுக்காக காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் அவரையே கோவையில் களமிறக்கினால் ஒட்டுமொத்த உடன் பிறப்புகளும் குஷியாகிவிடுவார்கள் என்பதால் திமுக தலைமை இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: #karurstampede: நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க! ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த செந்தில் பாலாஜி...!