×
 

திமுக தோல்விக்கு பின்னால் மெகா சதி! மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன அதிர்ச்சி ரிப்போர்ட்!

'தேர்தல் வியூக நிறுவனத்தின் ஆலோசனைப்படி, கட்சி நிர்வாகிகளை வேலை வாங்கியதும், தேர்தலில் தி.மு.க., அடைந்த தோல்விக்கு காரணம்' என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 19 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களில் மொத்தம் 36 பேர் இடம்பெற்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்திய இக்குழுக்கள், மாவட்டம் வாரியாக தயாரித்த அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்துள்ளன.

அந்த அறிக்கையில் பல முக்கிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில், அந்தத் தொகுதிக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது பெரும் தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுதி அளவில் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்பை அடிமட்டத்தில் ஆராயாமல் மேல்மட்ட முடிவுகளால் தோல்வி ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் வியூக நிறுவனங்களின் ஆலோசனையை அதிகம் நம்பியதும், கட்சி நிர்வாகிகளை ஒதுக்கி வைத்ததும் தோல்விக்கு முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ராகுல்காந்தி ஆசீர்வாதத்துடன் காங்., செய்த கழுத்தறுப்புகள்! மீண்டும் சீண்டும் திமுக! விஜயன் பதிலடி!

கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. எழிலரசன் இதுகுறித்து கூறுகையில், “மக்களை பல்வேறு வழிகளில் சந்தித்து ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என மொத்தம் 140 மணி நேரம் ஆய்வு செய்தோம். நேரடி சந்திப்பு, கடிதங்கள், புகார்கள் என 6,620 பக்கங்கள் அளவுக்கு கருத்துகள் வந்தன. அவற்றை படித்து, பகுப்பாய்வு செய்து 476 பக்க அறிக்கையாக தயாரித்து தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.

இந்த அறிக்கை திமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி மேலாண்மை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் திமுக தலைமை எடுத்த முடிவுகளில் குறைபாடுகள் இருந்ததை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

ஸ்டாலின் இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியை மறுசீரமைக்கும் முயற்சிகளை விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த தேர்தல்களுக்கு திமுக தயாராகும் என்கின்றனர் கட்சி வட்டாரங்கள். 

இந்த 476 பக்க அறிக்கை திமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமான ஆவணமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தது தமிழ்நாடுதான்! அமித்ஷா டார்கெட்! மே.வங்கம் வெற்றியை தொடர்ந்து களமிறங்கும் பாஜக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share