#BREAKING இபிஎஸ் அற்பத்தனம் அம்பலமானது... ராமதாஸ், நயினாருக்கும் சவுக்கடி பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி...!
பெண்கள் பாதுகாப்பு குறித்து இபிஎஸின் அற்பத்தனம் அம்பலமாகி இருப்பதாக ஆர்.எஸ். பாரதி கடுமையாக சாடியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து இபிஎஸின் அற்பத்தனம் அம்பலமாகி இருப்பதாக ஆர்.எஸ். பாரதி கடுமையாக சாடியுள்ளார்.
திமுகவுடைய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டடிருக்கிறார். அதில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடைய அற்பத்தனம் அம்பலமானது எனக்குறிப்பிட்டிருக்கிறார் .
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற செய்தியை எப்படியாவது செவியில் எட்டிவிடாத என்கிற காத்திருப்பில் விஷம பிரச்சாரத்தை நாள்தோறும் இபிஎஸ் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று ஆர்எஸ் பாரதி தன்னுடைய அறிக்கையில்குறிப்பிட்டிருக்கிறார். ஒரு குற்றம் நடந்த உடனேயே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்ப புத்தியோடு செயல்பட்டு வருவதாகவும், எதிர்கட்சிகளினுடைய அரைவேக்காட்டுத்தனத்தை படம் பிடித்து காட்டி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: "நான் என்ன தப்பு செஞ்சேன்... கட்சி நல்லா இருக்கனுன்னு தானே நினைச்சேன்..." - அதிமுக Ex. எம்.பி. சத்தியபாமா கதறல்...!
கோவை நிகழ்வை பொறுத்தவரையிலே கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்பட்டதாகவும், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி விட்டதாகவும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும், உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக்கொட்டை தனமாக அறிக்கை வெளியிட்டடிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று ஆர்எஸ் பாரதி கடுமையாக சாடி இருக்கின்றார்.
கோவை நிகழ்வில் காவல்துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது எனவும், அந்த சம்பவம் குடும்ப தகராறில் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. என்னை யாரும் கடத்தவில்லை என்று அந்த பெண்ணே வீடியோ.மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
மேலும் இதேபோல நேற்றைய முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியை தனிப்படை அமைத்து காலை 6:30 மணிக்கு காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்து விட்டது எனவும் உண்மைகள் இப்படி இருக்க தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரச்சாரம் செய்வது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதேபோல ரயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதாகவும் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காது எனவும், அது திரும்ப.திரும்ப நிரூபணமாகி கொண்டேதான் இருக்கும் என்றும் ஆர்எஸ் பாரதி தன்னுடைய அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இது பெண்களுக்கான அரசா? கூச்சமா இல்லையா? வெட்கப்படுங்க ஸ்டாலின்! EPS காட்டம்...!