×
 

ஆட்சியில் பங்கு கிடையாது! காங்கிரஸை கைவிட்டது திமுக! விஜய் பக்கம் தாவ திட்டம்!

ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் நிபந்தனைகளை ஏற்க முடியாது என, தி.மு.க., திட்டவட்டமாக கூறிவிட்டது.

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற காங்கிரஸின் நிபந்தனைகளை திமுக திட்டவட்டமாக மறுத்து வருகிறது. 

இதனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து போனால் போகட்டும், இருந்தால் இருக்கட்டும்' என்ற அலட்சிய போக்கை திமுக மூத்த நிர்வாகிகள் கடைப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்தது, காங்கிரஸுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் பங்கு கோரி வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி சேருங்க.!! திமுக மதிப்பதேயில்லை! அடம் பிடிக்கும் காங் நிர்வாகிகள்!

ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவே கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனித்து ஆட்சி அமைவோம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ள நிலையில், ஆளும் திமுக எப்படி காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வழங்கும் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு கட்சியை வலுப்படுத்த விரும்பலாம். ஆனால், திமுக அதை ஏற்க முடியாது. ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் என்ற கோரிக்கைகளை திட்டவட்டமாக மறுத்துவிட்டோம்" என்றார். இதன் எதிரொலியாக, திமுகவினர் பொதுமேடைகளில் காங்கிரஸை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற திமுக மூத்த எம்.பி. ஒருவர், "ஆட்சியில் பங்கு கேட்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தனித்து போட்டியிட முடியுமா? அப்படி வெற்றி பெற்றால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்" என்று சவால் விடுத்தார்.

மேலும், திமுக மூத்த அமைச்சர் ஒருவர் நிர்வாகிகள் கூட்டத்தில், "காங்கிரஸ் போனால் போகட்டும், இருந்தால் இருக்கட்டும்" என்று அலட்சியமாக பேசியதாக தகவல் பரவியுள்ளது.

இதற்கு பதிலடியாக, விஜய்யின் 'ஜனநாயகன்' பட விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சலசலப்புகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.

இதையும் படிங்க: ஓபிஎஸ், சசிகலா NO! டிடிவிக்கு மறுப்பு சொல்லாத இபிஎஸ்? முக்குலத்தோர் வாக்குக்காக சைலண்ட் மோடில் எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share