”தூக்குல தொங்க கயிறு கிடைக்கலயா... நான் அனுப்பட்டா” - டிடிவியை வாண்ட்டடாக வம்பிழுத்த திமுக பேச்சாளர்...!
பழனிச்சாமியுடன் சேர்வதைவிட நான் தூக்குப்போட்டு தொங்குவேன் என்ற தினகரனுக்கு கயிறு கிடைக்கவில்லையா தலைமைக்கழகப்பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்" , “எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்குவேன்” என்றெல்லாம் விமர்சித்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. திமுகவை அழிக்கவும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும் கூட்டணி சேர்ந்ததாக டிடிவி தினகரன் கூறிய காரணங்களை பெரும்பாலான மக்களையும், எதிர்க்கட்சிகளையும் சமாதானப்படுத்தவில்லை.
மேலும் சமீபத்தில் சென்னையில் பிரதமர் மோடி தலைமையிலான பிரச்சார கூட்டத்தில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என டிடிவி தினகரனும், மதிப்பிற்குரிய சகோதரர் என மாற்றி, மாற்றி பாச மழை பொழிந்ததும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக டிடிவி தினகரன் தூக்கில் தொங்குவேன் என பேசியதற்கு திமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமை வகித்தார், அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார், சிறப்பு பேச்சாளராக கம்பம்செல்வேந்திரன் உரையாற்றும்போது, திமுக அரசின் சாதனைகளை புள்ளிவிபரங்களுடன் எடுத்துவைத்தார். கூட்டணிகுறித்து பேசுகையில், பழனிச்சாமியுடன் சேர்வதைவிட தூக்குப்போட்டு தொங்குவேன் என்றார் தினகரன் இன்றைக்கு என்னவானது, கயிறு கிடைக்கவில்லையா என்றால் நாங்கள் அனுப்பட்டுமா என்றார்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!
விஷம் இருக்கிறது, குளம் குட்டை இருக்கிறது, எதையாவது ஒன்றை தேர்வு செய்து உங்கள் வாக்குறுதியை காப்பாற்றிகொள்ளுங்கள். தினகரன்மீது அமலாக்கப்பிரிவு ரூ.31 கோடி அன்னியசெலவாணி மோசடிக்கு அபராதம் இருக்கிறது, இன்னும் முடியவில்லை, மேலும் இரட்டை இலை சின்னம் வாங்கிகொடுக்க ரூ.5கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு இருக்கிறது, அதிலிருந்து மீள்வதற்கு வாக்குறுதி அதனால் அவர் சேர்ந்துள்ளார். பாமகவையும் மாம்பழம்சின்னத்தையும் வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் அன்புமணிக்கு இருக்கிறது. அதனால் அவர் இந்தக்கூட்டணியில் உள்ளார், அவர்களது கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றார்.
இதையும் படிங்க: சீமான் சொல்வது பொய்..! தமிழ் தேர்வில் விலக்கா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!