அவதூரில் திமுக வல்லவர்கள்..! ஸ்டாலினின் அநாகரிக பேச்சு..! முதல்வர் விஜய் வார்னிங்..!!
திமுகவினர் அவதூரில் வல்லவர்கள் என்ற முதல்வர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவை உருவக் கேலி செய்ததாகக் கூறப்படும் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்கு உள்ளது.
அக்டோபர் 2, 2026 அன்று தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த நிகழ்வு தவெக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பைத் தூண்டியதோடு, முதலமைச்சர் விஜய் உட்பட பல தலைவர்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "தாராபுரம் தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுகவினர் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உருவக் கேலி...! பெண்ணை இப்படியா பேசுவது..? ஸ்டாலின் மீது தவெக புகார்..!!
ஸ்டாலின் உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாக பேசியுள்ளார் என்றும் அவர் பேச்சுக்கு தாராபுரம் தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் திட்டவட்டமாக கூறினார். தமிழ் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக கண்டிக்கிறேன் என்றும் பெண்கள் அருகில் இருக்கும்போதே அவதூறு பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள் எனவும் முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: "விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்"..! எல்லாத்துக்கும் வெற்றி-ன்னு ஸ்டிக்கர்..! ஸ்டாலின் தாக்கு.!!