விஜய் அலையை சமாளிக்கிறது எப்பிடி?!! திட்டம் போடும் திமுக! இளைஞர்களுக்கு அடிக்கிது யோகம்!!
தமிழகத்தில் வீசும் விஜய் அலையால் தி.மு.க.,வில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் (மா.செ.,) நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வீசும் விஜய் அலையை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. பெரிய அமைப்பு ரீதியான மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் (மா.செ.) என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் பதவிகளை அதிகரிக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
தற்போது தி.மு.க. 72 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டு மா.செ.க்களுக்கு தலா 5 தொகுதிகளும், மற்ற மூன்று மா.செ.க்களுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் ஒரு மா.செ.க்கு 3 அல்லது 4 தொகுதிகள் என்ற அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை மாற்றி, ஒவ்வொரு மா.செ.க்கும் அதிகபட்சம் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மிக உருக்கமாக பேசினார். த.வெ.க.வின் இளைஞர் அலைக்கு எதிராக தி.மு.க.வில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். புதிய அமைப்பு முறையால் மா.செ. பதவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக பதவி வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பூத் ஏஜெண்டுகளுக்கு சிறப்பு கவனிப்பு!! ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் திமுக! ,மு.க.ஸ்டாலின் திட்டம்!
தி.மு.க. சீனியர் நிர்வாகிகள் கூறுகையில், “தற்போதுள்ள சில மா.செ.க்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இளைஞர்களை ஊக்குவித்து கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவோம். சமூக ஊடகங்களில் தி.மு.க.வின் செயல்பாட்டை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.
விஜய் தலைமையிலான த.வெ.க.வின் எழுச்சியால் இளைஞர்கள் பெருமளவில் ஈர்க்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தி.மு.க.வும் இளைஞர் படையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய மா.செ.க்கள் பெரும்பாலும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பு மாற்றம் தி.மு.க.வுக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதுள்ள மா.செ.க்களிடையே சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தி.மு.க. தலைமை இந்த மாற்றத்தை விரைவில் செயல்படுத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திமுக, அதிமுக, நாதக ஓட்டுகளை வாரி சுருட்டிய தவெக விஜய்! எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு இழப்பு?