×
 

திமுக டு தவெகவுக்கு தாவியவர்களுக்கு தண்டனை?... ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள்...!

திமுகவில் இருந்து தவெக கட்சியில்  இணைந்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு

நாகை அருகே காடந்தேத்தியில் திமுகவில் இருந்து தவெக கட்சியில்  இணைந்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு; விசேஷம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை எனவும், புதிதாக கட்டப்படும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சேர்க்கவில்லை என காவல் நிலையத்தில் புகார். 

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட காடந்தேத்தி ஜீவா நகர், காலனி தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகம் குடும்பங்கள் உள்ளது.

இங்கு பெரும்பான்மையான குடுமத்தினர் திமுக கட்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையை 12 குடும்பத்தினர் திமுகவில் இருந்து விலகி தவெக மற்றும் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பான்மையாக உள்ள திமுகவினர் கட்சி மாறிய 12  குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அவர்கள் வீட்டு விஷசங்கள், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை எனவும் அதே போன்று அவர்களின் வீட்டு இறப்பு நிகழ்வுகளில் அனுமதிப்பதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

இந்த நிலையில் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கும் தங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவதாக கூறி தலைஞாயிறு காவல் நிலையித்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனையடுத்து இரு தரப்பையும் அழைத்து வட்டாட்டாசியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்ற நிலையில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சி மாறிய 12 குடும்பங்களையும் ஒதுக்கிவிட்டு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பணிகளில் ஈடுபடுவதாக கூறி மீண்டும் தலைஞாயிறு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறிய போது, கட்சி மாறிய ஒரே காரணத்திற்காக தங்களை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஏற்கனவே  ஊருக்கு பொதுவாக நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகள் விழாவிலும் பங்கேற்க விடாமல் தடுத்ததாகவும் தற்போது  விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வுகளில் கூட தங்களை சேர்க்காமல் விழா வைப்பதாக கூறிய அவர்கள் கோவில் நிகழ்வுகளில் தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் தங்கள் மீதான கட்டுபாடுகளை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இத குறித்து திமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது ,அவர்கள் மீது எந்த கட்டுபாடுகளும் விதிக்கவில்லை எனவும், ஒதுக்கி வைக்கவில்லை எனவும் கூறிய அவர்கள் மாதந்தோறும் நடைப்பெறும் கிராம கூட்டத்தில் அவர்களாகவே பங்கேற்கவில்லை என்றும் அதே போன்று கோவில் திருப்பணி கூட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டதாக கூறிய அவர்கள் கோவில் நிர்வாக குழுவில் அவர்கள் தரப்பில் 4 பேர் இருப்பதாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் கோவில் கும்பாபிஷேகத்தை தடுப்பதாக தெரிவித்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share