"SOFA MODEL அரசு"..! பொய் வழக்குகளால் திமுகவை முடக்க முடியாது..! உதயநிதி ஆவேசம்..!!
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கணவன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் ஆத்தூரில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது Sofa Model அரசு என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!
அவதூறு பேசி, பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கண்டித்துள்ளார். பொய் வழக்காலும், கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!